இரண்டு நாட்களாக ஆப்சென்ட்… ஈபிஎஸுக்கு என்ன ஆச்சு?

Published On:

| By Kavi

தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் நாளாக இன்று (ஜனவரி 8) சட்டப்பேரவைக்கு வரவில்லை.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த ஜனவரி 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள், அண்ணா பல்கலை மாணவி விவகாரத்தில் யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பி கடந்த ஜனவரி 6ம் தேதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சட்டப்பேரவைக்குள்ளேயே போராட்டம் நடத்தினர்.

நேற்று, மறைந்த முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஈரோடு கிழக்கு எம்எல்ஏவும், காங்கிரஸ் மூத்த தலைவருமாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது. நேற்றைய கூட்டத்தில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்கவில்லை.

மூன்றாம் நாளாக இன்று சட்டப்பேரவை கூடியது. அப்போது அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு உடை அணிந்து வந்தனர்.

அண்ணா பல்கலைக்கழக மாணவி விவகாரம் தொடர்பாக யார் அந்த சார் என்று கேள்வி எழுப்பியும்… டங்ஸ்டன் சுரங்கத்துக்கு எதிராக வாயில் வெள்ளை மாஸ்க் அணிந்தும் வந்திருந்தனர்.

எனினும் இரண்டாவது நாளாக இன்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவைக்கு வரவில்லை.

இன்று சட்டப்பேரவையில் முக்கியமான நாளாக இருந்தும் கூட எதிர்க்கட்சித் தலைவர் ஏன் வரவில்லை என்று கேள்வி எழுந்தது.

இன்னொரு பக்கம் எடப்பாடி பழனிசாமியின் உறவினர் ராமலிங்கம் தொடர்புடைய வீடுகளில் இரண்டாவது நாளாக வருமானவரித் துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் அதன் காரணமாக அவர் வரவில்லையா என்ற கேள்வியும் வலம் வந்தது.
ஆனால் அவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் வரவில்லை என்று அதிமுக வட்டாரத்தில் கூறுகிறார்கள்.

காய்ச்சல் காரணமாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டில் ஓய்வெடுப்பதாகவும் நேற்றும் இன்றும் வீட்டிற்கே வந்து எடப்பாடியின் குடும்ப மருத்துவர் சிகிச்சை அளித்து சென்றதாகவும் தகவல்கள் வருகின்றன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

ஸ்டாலின் சொன்ன பதில் ‘சார்’… அதிமுகவினரின் ரியாக்‌ஷன்! என்ன நடந்தது சட்டமன்றத்தில்?

யார் அந்த சார்? ஞானசேகரன் யார்?: சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் விளக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share