குட் நியூஸ்! அரசு ஊழியர்- ஆசிரியர் சங்கங்களுடன் அமைச்சர்கள் குழு டிச.22-ல் பேச்சுவார்த்தை!

Published On:

| By Mathi

TN Govt talks

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் நிர்வாகிகளுடன் அமைச்சர்கள் குழு வரும் 22-ந் தேதி பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக இன்று (டிசம்பர் 19) தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22.12.2025 அன்று காலை 10.00 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் உள்ள 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share