வெயில் சுட்டெரிக்கும்… இனி குடையில்லாம வெளியே போகாதீங்க!

Published On:

| By indhu

Tamil Nadu may experience dry weather till April 1!

தமிழகத்தில் ஏப்ரல் 1ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும் என இன்று (மார்ச் 29) சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தென் இந்தியப் பகுதிகளின் மேல், வளிமண்டல கீழடுக்குகளில், காற்றின் திசை மாறுபடும் பகுதி நிலவுகிறது.

ADVERTISEMENT

இதன் காரணமாக இன்று முதல் ஏப்ரல் 1ஆம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ஏப்ரல் 2 முதல் 4ஆம் தேதி வரை தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். வட தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

ADVERTISEMENT

Tamil Nadu may experience dry weather till April 1!

அதிகபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு:

ADVERTISEMENT

இன்று முதல் ஏப்ரல் 2ஆம்தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக்கூடும்.

அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும்பொழுது தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் அசவுகரியம் ஏற்படலாம்.

சென்னையை பொறுத்தவரை அடுத்த இரண்டு தினங்களுக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதுவுமில்லை” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்து

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பீகாரில் காங்கிரஸுக்கு 9 தொகுதிகள் ஒதுக்கிய லாலு!

“ரத்னம்” புது பாடல் : அக்கற காட்டும் விஷால்.. உருகும் பிரியா பவானி சங்கர்..!

காங்கிரஸ் கட்சிக்கு ரூ.1,700 கோடி அபராதம்: வருமானவரித்துறை நோட்டீஸ்!

தமிழக பாஜக நிர்வாகிகளுடன் மோடி இன்று கலந்துரையாடல்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share