தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று மார்ச் 30-ந் தேதி முதல் தொடங்குகிறது.
தமிழகத்தில் 234 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 23-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் இன்று முதல் ஏப்ரல் 6-ந் தேதி வரை நடைபெறும். விடுமுறை நாட்கள் போக மொத்தம் 4 நாட்கள் மட்டுமே வேட்பு மனுத் தாக்கல் நடைபெறும்.
ஏப்ரல் 7-ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். ஏப்ரல் 9-ந் தேதி வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற கடைசி நாள். ஏப்ரல் 23-ந் தேதி பதிவாகும் வாக்குகள் மே 4-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
