தமிழக குமாரசாமி – கருணாநிதி

Published On:

| By Balaji

திமுக தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள கேள்வி-பதில் முறையில் அமைந்துள்ள அறிக்கையில், “கிரானைட் அதிபரை விடுதலைசெய்த மேலூர் மாஜிஸ்திரேட் ஒரு “தமிழக குமாரசாமி!”. தேசிய நெடுஞ்சாலைத்துறையில், அதிமுக ஆட்சியில் அக்கறை காட்டப்படவில்லை, அலட்சியம்தான் காட்டப்பட்டது. ஜெயலலிதாமீதான சொத்துக்குவிப்பு வழக்கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்த மனுதாரர்களில் ஒருவரான பேராசிரியரின் வழக்கறிஞரின் வாதத்தையே நேரில் கேட்காமல், எழுத்துபூர்வமாகத் தாக்கல் செய்தால் போதுமானது என்று, உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்திருக்கிறார்கள்.

சுமார் பதினெட்டு ஆண்டுகளாக பல்வேறு கட்டங்களிலும் இழுத்தடிக்கப்பட்டு, காலம் கடத்தப்பட்டு வந்த வழக்கு இது. தற்போது, தேர்தல் நெருங்குகிறது என்பதைத்தவிர, வழக்கு விசாரணையை விரைந்து முடிக்கவேண்டிய அவசரம் என்ன வந்துவிட்டது?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share