கோடை விடுமுறை முடிந்து நாளை (ஜூன் 10) பள்ளி திறக்கும் நாளன்று மாணவ-மாணவியர்களுக்கு பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
“2024 – 25-ம் ஆண்டு கல்வியாண்டில் அனைத்து வகை அரசு, அரசு உதவி பெறும், பகுதி நிதியுதவி பெறும் பள்ளிகளில் நிதி உதவி பெறும் வகுப்புகள் மற்றும் சுயநிதி பெறும் பள்ளிகளில் மாநில பாடத்திட்டத்தின் கீழ் தமிழ் வழியில் இயங்கும் வகுப்புகள் ஆகியவற்றில் ஒன்றாம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள், புத்தகப்பை, காலணிகள், கம்பளிச்சட்டை, மழைக்கோட்டு, பூட்ஸ் மற்றும் காலுறைகள், சீருடைகள், வண்ணப் பென்சில்கள், வண்ணக் கிரையான்கள், மிதிவண்டிகள், கணித உபகரண பெட்டிகள் மற்றும் புவியியல் வரைப்படம் ஆகிய நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
அந்த வகையில் பள்ளி திறக்கப்படும் நாளான ஜூன் 10-ம் தேதி மாணவ-மாணவியர்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுப்புத்தகங்கள் மற்றும் புவியியல் வரைப்படம் ஆகிய நலத்திட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன.
அதன்படி, 70.67 லட்சம் மாணவர்களுக்கு பாடப்புத்தகங்களும், 60.75 லட்சம் மாணவர்களுக்கு நோட்டுப்புத்தகங்களும், 8.22 லட்சம் மாணவர்களுக்கு புவியியல் வரைப்படமும் வழங்கப்பட உள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
கிச்சன் கீர்த்தனா: சண்டே ஸ்பெஷல் – நான்ஸ்டிக் பாத்திரங்கள்… எச்சரிக்கும் ஐசிஎம்ஆர்!
டிஜிட்டல் திண்ணை: அமித் ஷாவுக்கு எதிராக யோகி – அவசர கூட்டம் கூட்டிய மோடி… பாஜகவில் அடுத்த பூகம்பம்!
அதான் பயமா இருக்கு : அப்டேட் குமாரு
மோடியை எதிர்த்து 2 முறை என்.டி.ஏ-விலிருந்து விலகிய சந்திரபாபு நாயுடு; மோடி 3.0 நிலைக்குமா?