சனாதன தர்மத்தை அழிக்க சதி.. ஆளுநர் ஆர்.என்.ரவி

Published On:

| By Mathi

Sanatana Dharma RN Ravi

பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் அழிக்க சதி செய்யும் சக்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருப்பது கூட்டுப் பொறுப்பு என்று தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார்.

சென்னையில் நடைபெற்ற ஸ்ரீ கிருஷ்ண கான சபையின் நாம சங்கீர்த்தன வெள்ளி விழா தொடக்க நிகழ்வில் ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்றார். இந்நிகழ்வில்,
சங்கீதத்தில் சிறந்த பங்களிப்பை வழங்கி வருவதற்காக சங்கீர்த்தன கலாநிதி விருதை யக்ஞராம சர்மாவுக்கும், சங்கீர்த்தன சூடாமணி விருதை கடலூர் கோபி பாகவதருக்கும் வழங்கினார் ஆளுநர் ரவி.

ADVERTISEMENT

இந்த நிகழ்ச்சியில் பேசிய ஆளுநர் ரவி,
பக்தி எவ்வாறு சனாதன தர்மத்தை அமைப்புகளின் இருப்புகளுக்கு அப்பால் மக்களின் இதயங்களில் கொண்டு சென்றது என்பதை விவரித்தார். நாயன்மார்கள், ஆழ்வார்கள் மற்றும் எண்ணற்ற துறவிகள் மூலம் தமிழ்நாட்டின் தோன்றிய ஆன்மிக இயக்கம், இந்தியா முழுவதும், பல்வேறு மொழிகளின் ஊடாக, சனாதன தர்மத்தை வளர்த்து, பாதுகாத்து, பல நூற்றாண்டுகளாக அடிமைப்பட்டு, காலனித்துவத்தின் பிடியில் இருந்த போதும் பாரதத்தை ஒரே தேசமாக நிலைநிறுத்தியது என்றும் ஆளுநர் ரவி கூறினார்.

மேலும் கடந்த காலங்களில் இந்தியா எவ்வாறு குறிப்பிடத்தக்க அனைத்திலும் மாற்றம் கண்டுள்ளது என்பதையும், 2047 -ஆம் ஆண்டுக்குள் முழுமையாக வளர்ச்சியடைந்து தன்னிறைவு பெறும் இலக்கை நோக்கி நாடு முன்னேறி வருகிறது என்பதையும் ஆளுநர் ரவி சுட்டிக்காட்டினார்.

ADVERTISEMENT

அத்துடன் பாரதத்தையும் சனாதன தர்மத்தையும் அழிக்க சதி செய்யும் சக்திகளுக்கு எதிராக விழிப்புடன் இருப்பதும் நமது கூட்டுப் பொறுப்பாகும் என்றும் ஆளுநர் ரவி வலியுறுத்தினார்.

Photo of author
Mathi

30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share