அரசு மருத்துவமனைகளில் ஓராண்டே போதுமாம்: மருத்துவ மாணவர்களுக்கு அரசின் சலுகை!

Published On:

| By Selvam

தமிழகத்தில் முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த மாணவர்கள், அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பணிபுரிய வேண்டும் என்ற விதியை தமிழக அரசு தளர்த்தியுள்ளது.

இந்தியா முழுவதும் மருத்துவம் படிக்க நீட் நுழைவுத் தேர்வு பின்பற்றப்படுகிறது. அந்தவகையில், நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சிப் பெற்று முதுநிலை மருத்துவப் படிப்பு முடித்த மாணவர்கள் அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும். இதற்கு விருப்பம் இல்லாத மாணவர்கள் ரூ.40 லட்சம் கட்டணம் செலுத்த வேண்டும் என்ற விதிகள் உள்ளது.

ADVERTISEMENT

இந்த விதிகளை தளர்த்த வேண்டும் என்று மருத்துவ மாணவர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

ADVERTISEMENT

இந்தநிலையில், முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த பிறகு 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பதை ஓராண்டாக குறைத்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், “முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த பிறகு 2 ஆண்டுகள் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்பது ஓராண்டாக குறைக்கப்படுகிறது.

ADVERTISEMENT

அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் இல்லாதவர்கள் செலுத்த வேண்டிய தொகையானது ரூ.40 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக குறைக்கப்படுகிறது.

அதேபோல, முதுநிலை டிப்ளமோ மாணவர்களுக்கு ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக கட்டணம் குறைக்கப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு மருத்துவமனைகளில் ஏற்கனவே மருத்துவர்கள் பற்றாக்குறை இருந்து வரும் நிலையில், தமிழக அரசின் இந்த அறிவிப்பானது பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையில் அமைந்துள்ளதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செல்வம்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தொடர் விடுமுறை: பல மடங்கு உயர்ந்த விமான கட்டணம்!

இந்தியா கூட்டணிக் கட்சிகள் ஆலோசனை!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share