துணைவேந்தர்கள் நியமன வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற கோரி தமிழக அரசு மனு- மே. 26-ல் விசாரணை

Published On:

| By Minnambalam Desk

Supreme Court

தமிழக பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமனம் செய்யும் அதிகாரத்தை தமிழக அரசுக்கு வழங்க வகை செய்யும் சட்டத்துக்கு எதிரான வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற கோரும் மனு மீது மே 26-ந் தேதி விசாரணை நடைபெற உள்ளது. Tamil Nadu Government Moves Supreme Court Seeking Transfer of Vice-Chancellors Appointment Case

மாநில அரசின் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை நியமிக்க தமிழக அரசுக்கு அதிகாரம் வழங்க வகை செய்யும் மசோதா உள்ளிட்டவைகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் தரவில்லை. இதனால் தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

உச்சநீதிமன்றமானது ஆளுநர் ரவியை கடுமையாக விமர்சித்ததுடன், அவரால் நிறுத்தி வைக்கப்பட்ட 10 மசோதாக்களுக்கும் தமது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி ஒப்புதல் தந்தது. இதனால் தமிழகத்தில் பல்கலைக் கழகங்களின் துணைவேந்தர்களை தமிழக அரசு நியமிக்க வகை செய்யும் சட்டம் நடைமுறைக்கு வந்தது.

இந்த சட்டத்துக்கு எதிரான சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜகவைச் சேர்ந்த வெங்கடாஜலபதி என்பவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்ற கோரி தமிழக அரசு, மனுத் தாக்கல் செய்திருந்தது.

ஆனால் சென்னை உயர்நீதிமன்றத்தின் கோடைகால விடுமுறை பெஞ்ச் நீதிபதிகளான ஜி.ஆர். சுவாமிநாதன், வி.லட்சுமி நாராயணன் ஆகியோர், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுத் தாக்கல் செய்திருப்பதாக தெரிவித்த போதும், தமிழக அரசின் சட்டத்துக்கு இடைக்கால தடை விதித்தனர். இது மிகப் பெரும் சர்ச்சையானது.

இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை உச்சநீதிமன்றத்துக்கு மாற்றக் கோரும் தமிழ்நாடு அரசின் மனு மீது மே 26-ந் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற உள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share