பத்திரிகையாளர் குடும்ப நல நிதி உயர்வு… தமிழக அரசு உத்தரவு!

Published On:

| By Selvam

பத்திரிகையாளர் குடும்ப நல நிவாரண உதவி நிதியை உயர்த்தி தமிழக அரசு இன்று (டிசம்பர் 18) அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சென்னை பத்திரிகையாளர் மன்றத்தினர் முதலமைச்சர் ஸ்டாலினை நேற்று (டிசம்பர் 17) சென்னை தலைமை செயலகத்தில் சந்தித்தனர்.

ADVERTISEMENT

இந்த சந்திப்பின் போது பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். அதில் ஒன்றாக பத்திரிகையாளர்கள் மரணமடைந்தால் அவர்களுடைய குடும்பத்திற்கு வழங்கப்படும் நிவாரண நிதியினை பத்து லட்சமாக உயர்த்த வேண்டும் என கோரியிருந்தனர்.

அரசின் பரிசீலனைக்குப் பின்னர், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கப்படும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியானது, பத்திரிகையாளர்கள் 20 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தினால் அவர்களுடைய குடும்பத்திற்கு ரூ.10,00,000 நிவாரணம் வழங்கப்படும்.

ADVERTISEMENT

15 ஆண்டுகள் பணிபுரிந்து, பணியில் இருக்கும் போது இயற்கை எய்தினால் ரூ.7,50,000, 10 ஆண்டுகள் ரூ.5,00,000, 5 ஆண்டுகள் ரூ.2,50,000 என்றும் பத்திரிகையாளர் குடும்ப உதவி நிதியினை உயர்த்தி வழங்கிட அரசு ஆணையிடுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

ADVERTISEMENT

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

இந்தி தேசிய மொழியா?: பிரபலங்கள் கருத்து!

மதுரை: லஞ்சப் புகாரில் சிக்கிய ஜிஎஸ்டி அதிகாரிகள்… கைது செய்த சிபிஐ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share