ADVERTISEMENT

“பேருந்துகளில் ரூ.2000 நோட்டுகள் வாங்க வேண்டாம்”: போக்குவரத்து கழகம்

Published On:

| By Selvam

அரசு பேருந்து நடத்துனர்கள் பயணிகளிடமிருந்து ரூ.2000 நோட்டுகளை வாங்க வேண்டாம் என்று அறிவுறுத்தல் வழங்கும்படி திருநெல்வேலி கோட்ட பொது மேலாளருக்கு அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

இதுகுறித்து அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய ரிசர்வ் வங்கியின் 19.05.2023-ஆம் தேதி அறிக்கையில் புழக்கத்தில் உள்ள ரூ.2000 நோட்டுகளை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது. இருப்பினும் ரூ.2000 நோட்டுகள் சட்டப்பூர்வமான டெண்டரில் இருக்கும் என்றும் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நாள் ஒன்றிற்கு ரூ.20 ஆயிரம் வரை வங்கிகளில் டெபாசிட் செய்து மாற்றிக்கொள்ளலாம் என்று தெரிவித்துள்ளார்கள்.

ADVERTISEMENT

இதன்காரணமாக ரூ.2000 ஆயிரம் ரூபாய் நோட்டுக்களை அரசு போக்குவரத்து கழகத்தால் வங்கியில் செலுத்த இயலாத நிலை உள்ளதால் 23.05.2023 முதல் நடத்துனர்கள் அனைவரும் பயணிகளுக்கு இடையூறு ஏற்படா வண்ணம் பக்குவமாக எடுத்துரைத்து ரூ.2000 நோட்டுகளை வழித்தடத்தில் வாங்குவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும் வசூல் தொகையை பிறரிடம் மாற்றம் செய்வதையும் தவிர்க்கும்படி தகுந்த அறிவுரை வழங்குமாறும் பொது மேலாளர் மற்றும் அனைத்து கிளை மேலாளர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் தினசரி ஒவ்வொரு கிளைகளிலும் நடத்துனர்களால் செலுத்தப்பட்ட வசூல் தொகையில் ரூ.2000 நோட்டுகள் எண்ணிக்கை குறித்த விவரங்கள் மண்டல கணக்கு பிரிவு வாயிலாக மத்திய கணக்கு பிரிவிற்கு தெரியப்படுத்த அறிவுறுத்தப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

செல்வம்

நகைக்கடைகளில் ரூ.2000 நோட்டுகள் வாங்க மறுப்பா?

ADVERTISEMENT

மும்பை-பெங்களூரு: ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது யார்?

”ரேஷன் கடைகளில் ரூ.2000 நோட்டுகளை பயன்படுத்தலாம்”: பெரியகருப்பன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share