மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன், சிலம்பரசன், திரிஷா, அபிராமி உள்ளிட்டோர் நடித்த ‘தக் லைஃப்’ படம் இந்த ஆண்டு மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படங்களுள் ஒன்று. நாளை (ஜூன் 5) இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. tamil nadu government approves special shows
இந்தநிலையில், தக் லைஃப் படத்திற்கு நாளை ஒரு நாள் மட்டும் கூடுதாலக ஒரு சிறப்பு காட்சிக்கு அனுமதியளிக்க வேண்டும் என்று ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் சென்னை நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நாராயணன் தமிழக அரசின் உள்துறையிடம் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்தநிலையில், தக் லைஃப் திரைப்படத்திற்கு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து திரையரங்குகளிலும் நாளை ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சியினை திரையிட தமிழக அரசின் உள்துறை அனுமதியளித்து இன்று (ஜூன் 4) அரசாணை வெளியிட்டுள்ளது.
முதல் காட்சி காலை 9 மணிக்கு தொடங்கி இரவு 2 மணி வரை மொத்தமாக ஐந்து காட்சிகள் திரையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கன்னடம் தமிழில் இருந்து உருவானது என்று கமல்ஹாசன் பேசியதற்கு எதிர்ப்புகள் எழுந்த நிலையில், கர்நாடகாவில் மட்டும் தக் லைஃப் படத்தின் வெளியீட்டு தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. tamil nadu government approves special shows
