மலேசியாவில் வேலை… மாதம் ரூ.80,000 சம்பளம்… முழு விவரம் இதோ!

Published On:

| By Selvam

tamil nadu government announced job opportunities

மலேசியாவில் PIPING ENGINEER, PLANNING ENGINEER, TENDERING ENGINEER உள்ளிட்ட பணிகளில் சேர விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு இன்று (மே 20) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

“மலேசியாவில் பணிபுரிய B.E & B.TECH தேர்ச்சி பெற்று மூன்றில் இருந்து ஐந்து வருட பணி அனுபவத்துடன் 24 இருந்து 42 வயதிற்கு உட்பட்ட QC Inspector பணிக்கு மாத வருமானம் ரூ.70,000 – 80,000,

Piping Engineer பணிக்கு ரூ.60,000 – 80,000, Planning Engineer (Prinevara P6) பணிக்கு ரூ.70,000 – 84,000, Tendering Engineer பணிக்கு ரூ.70,000 – 76,000, Piping Foreman பணிக்கு ரூ.54,000 – 62,400 சம்பளம் வழங்கப்படும்.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது தேர்ச்சி பெறாதவர்கள் TIG & ARC Welders cs பணிக்கு மாத வருமானம் ரூ.41,600 – 50,000 & Pipe Fitter பணிக்கு ரூ.38,000-50,000 ஊதியமாக வழங்கப்படும்.

உணவு, விசா, இருப்பிடம் மற்றும் விமானப் பயணச்சீட்டு வேலை அளிப்பவரால் வழங்கப்படும்.
மேற்குறிப்பிட்ட பணிக்கு செல்பவர்கள் விசா கிடைத்தப் பின்னர் இந்நிறுவனத்திற்கு சேவைக்கட்டணமாக ரூ.35,400 மட்டும் செலுத்தினால் போதும்.

மேலே குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு செல்ல விருப்பமுள்ள ஆண் பணியாளர்கள் overmichm@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு தங்களின் சுய விவரம் அடங்கிய விண்ணப்பபடிவம், கல்வி, பணி அனுபவ சான்றிதழ் மற்றும் புகைப்படம் (Resume, Passport Original & Copy) Aadhar Copy & Photo ஆகியவற்றை 29.05.2025-க்குள் அனுப்பவும். tamil nadu government announced job opportunities

கூடுதல் விபரங்களுக்கு அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன இணையத்தளம் www.omcmanpower.tn.gov.in மற்றும் தொலைபேசி எண்கள் (044 – 22502267) & வாட்ஸ் ஆப் எண் (9566239685) வாயிலாக அறிந்துகொள்ளலாம்” என்று தெரிவித்துள்ளது. tamil nadu government announced job opportunities

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share