கேலோ இந்தியா பதக்கப் பட்டியல்: 2-ம் இடத்தில் தமிழ்நாடு

By Manjula

|

Published on 24 Jan 2024, 4:48 PM

Tamil Nadu second place in khelo India

கேலோ இந்தியா பதக்கப்பட்டியலில், தமிழ்நாடு முதல் இடத்தில் இருந்து இரண்டாமிடத்திற்கு  சரிந்துள்ளது.

தமிழ்நாடு நடத்தும் 6-வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் சென்னை,திருச்சி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்தியா முழுவதுமிருந்து 5,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கவுள்ளனர்.

ADVERTISEMENT

கடந்த ஜனவரி 2௦-ம் தேதி நடைபெற்ற ஆடவருக்கான ரிதமிக் ஜோடி யோகாவில் தமிழகத்தை சேர்ந்த இரட்டையர்கள் சர்வேஷ், தேவேஷ் தங்கப் பதக்கம் வென்றனர். ஆடவருக்கான வாள்வீச்சு போட்டியில், தமிழகத்தின் அன்பிலஸ் கோவின் தங்கப் பதக்கம் வென்றார்.

Tamil Nadu second place in khelo India

ADVERTISEMENT

ஜனவரி 21-ம் தேதி நடைபெற்ற யோகா போட்டியில் தமிழ்நாடு வீராங்கனை நவ்யா தங்கப் பதக்கம் வென்றார்.

வாள்வீச்சு தனிநபர் சேபர் பிரிவில் தமிழ்நாட்டின் அர்லின் தங்கப் பதக்கம் வென்றார்.

ADVERTISEMENT

ஜனவரி 22-ம் தேதி நடைபெற்ற சைக்கிள் பந்தயத்தில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டாபிடாரத்தைச் சேர்ந்த ஸ்ரீமதி தங்கப் பதக்கம் வென்றார்.

இதேபோல மகளிருக்கான ஸ்பிரின்ட் பிரிவில் தன்யதா, ஸ்ரீமதி, தமிழரசி, சுவேதா ஆகியோரை உள்ளடக்கிய தமிழக அணி தங்கப் பதக்கம் வென்றது.

நேற்று நடைபெற்ற ஸ்குவாஷ் போட்டியின் மகளிர் ஒற்றையர் பிரிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த பூஜா ஆர்த்தி தங்கப் பதக்கம் வென்றார்.

டிராக் சைக்கிள் பந்தயத்தின் மகளிருக்கான 2 கிலோ மீட்டர் பிரிவில் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த ஜே.பி.தன்யதா தங்கப் பதக்கம் வென்றார்.

மகளிருக்கான ஸ்கிராட்ச் பிரிவில் தமிழகத்தின் ஆர்.தமிழரசி தங்கப் பதக்கம் வென்றார். மகளிருக்கான ஆர்ட்டிஸ்டிக் ஜோடி பிரிவில் தமிழகத்தின் மேனகா, பெட்ராஷிவானி ஜோடி  தங்கப் பதக்கம் வென்றது.

ஆடவருக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் தமிழகத்தின் விஷ்ணு தங்கப் பதக்கம் வென்றார். இதேபோல ஆடவர் பிரிவு 400 மீட்டர் ஓட்டத்தில் தமிழ்நாடு வீரர் சரண் தங்கம் வென்றார்.

Tamil Nadu second place in khelo India

இதையடுத்து கேலோ இந்தியா பதக்கப்பட்டியலில் 12 தங்கம், 3 வெள்ளி, 16 வெண்கலம் என மொத்தமாக 31  பதக்கங்களுடன் தமிழ்நாடு 2-வது இடத்தில் உள்ளது.

முதல் இடத்தில் 14 தங்கப் பதக்கங்களுடன் மகாராஷ்டிராவும், மூன்றாவது, நான்காவது இடங்களில் தலா 7 தங்கப் பதக்கங்களுடன் ஹரியானா, டெல்லியும் ஐந்தாவது இடத்தில் 6 தங்கப் பதக்கங்களுடன் பஞ்சாப்பும் உள்ளது.

–மஞ்சுளா

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

“3 ஆண்டுகளில் 80 நாள்” : பேரவையை 100 நாள் நடத்த ராமதாஸ் வலியுறுத்தல்!

கோலிக்கு பதிலாக படிதார் அணியில் சேர்க்கப்பட்டது ஏன்? : ரோகித் விளக்கம்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Manjula

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel