முதலிடம் யாருக்கு?… தமிழ்நாடு-மகாராஷ்டிரா இடையே கடும் மோதல்!

Published On:

| By Manjula

tamil nadu khelo india

கேலோ இந்தியா பதக்கப்பட்டியலில் முதலிடத்துக்கு தமிழ்நாடு, மகாராஷ்டிரா இடையே கடும் மோதல் உருவாகியுள்ளது.

கடந்த ஜனவரி 19-ம் தேதி தொடங்கிய கேலோ இந்தியா போட்டிகள் தற்போது சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

ADVERTISEMENT

இதில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்த தமிழ்நாடு தற்போது இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் முதலிடத்தை யார் தக்க வைத்துக்கொள்வது? என்பதில், இரண்டு மாநிலங்களுக்கும் கடும் போட்டி நீடித்து வருகிறது.

tamil nadu khelo india

ADVERTISEMENT

தற்போது தமிழ்நாடு 25 தங்கப்பதக்கங்களுடன் இரண்டாவது இடத்திலும், மகாராஷ்டிரா 26 தங்கப்பதக்கங்களுடன் முதல் இடத்திலும் உள்ளன.

இன்னும் ஒரு தங்கப்பதக்கம் தான் இடைவெளி என்பதால், மீண்டும் முதல் இடத்தை தமிழ்நாடு விரைவில் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ADVERTISEMENT

இதற்கிடையே நேற்று(ஜனவரி 25) நடைபெற்ற கூடைப்பந்து போட்டியில் ஆடவர், மகளிர் என தமிழ்நாட்டின் இரண்டு அணிகளும் தங்கப் பதக்கம் வென்றன.

வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளின் புகைப்படம் பகிர்ந்து தூத்துக்குடி மாவட்ட எம்.பி கனிமொழி அவர்கள் தன்னுடைய எக்ஸ் தளத்தில்  வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.

-மஞ்சுளா 

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

”ஏழையா செத்தாலும்” பிக்பாஸ் போட்டியாளரின் திடீர் பஞ்ச்!

”உதிரன் வருகிறான்”: கங்குவா அப்டேட்!

இந்தியா கூட்டணியில் பிரச்சனையா?: திருமாவளவன் பதில்!

Photo of author
Manjula
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share