பட்ஜெட்…தொல்லியல் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்!

Published On:

| By Selvam

2025-26-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டமன்றத்தில் இன்று (மார்ச் 14) தாக்கல் செய்து வருகிறார். பட்ஜெட் உரையை தொடங்கும் போது பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்டின், “INEQUALITY IS A CHOICE, BUT WE CAN CHOOSE A DIFFERENT PATH” என்ற வார்த்தையை மேற்கோள் காட்டி தங்கம் தென்னரசு பேசினார்.

பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள தொல்லியல் துறைக்கான முக்கிய அறிவிப்புகள்:

ADVERTISEMENT

தமிழகத்தில், சிவகங்கை மாவட்டம் கீழடி, சேலம் மாவட்டம் தெலுங்கனூர், கோவை மாவட்டம் வெள்ளலூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் ஆதிச்சனூர், கடலூர் மாவட்டம் பனிக்கொள்ளை, தென்காசி மாவட்டம் கரிவலம்வந்தநல்லூர், தூத்துக்குடி மாவட்டம் பட்டணமருதூர், நாகப்பட்டினம் ஆகிய 8 இடங்களில் தொல்லியல் அகழாய்வுகள் நடைபெறும்.

ஈரோடு மாவட்டத்தில் ரூ.22 கோடி மதிப்பீட்டில் நொய்யல் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

ADVERTISEMENT

ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.21 கோடி மதிப்பீட்டில் நாவாய் அருங்காட்சியகம் அமைக்கப்படும்.

ரூ.40 கோடியில் எழும்பூர் அருங்காட்சியகத்தில் ஐம்பொன் மற்றும் செப்புத் திருமேனிகள் காட்சிக்கூடம் அமைக்கப்படும். Tamil Nadu budget archeological

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share