நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (மார்ச் 14) பட்ஜெட்டை தாக்கல் செய்து வருகிறார். இதில் சென்னைக்கு புதிய மேம்பாலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
முதல்வரின் கிராம சாலை திட்டத்தின் கீழ் 6 ஆயிரத்து 100 கிலோ மீட்டர் நீளம் கொண்ட சாலைகள் 2200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மேலும் ஊராட்சி ஒன்றியங்களில் சாலை பராமரிப்புக்காக 2025-26 ஆம் ஆண்டுக்கு 120 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுகிறது என பட்ஜெட்டில் அறிவித்தார். Tamil Nadu budget 2025-26
அதேபோல நகர்ப்புறங்களைப் பொறுத்தவரை தலைநகர் சென்னையில் புதிய மேம்பாலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
”வேளச்சேரி பிரதான சாலையில் இருந்து குருநானக் கல்லூரி வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேம்பாலம் அமைக்க 310 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது. வடசென்னையில் கொருக்குப்பேட்டை ரயில்வே மேம்பாலம் ரயில்வேயோடு இணைந்து 70 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்படும்” என நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்தார்.
கொருக்குப்பேட்டை ரயில்வே பாலம் என்பது நீண்ட காலமாக அப்பகுதி மக்களின் கோரிக்கை என்பது குறிப்பிடத் தக்கது. Tamil Nadu budget 2025-26