லண்டன் புறப்பட்ட அண்ணாமலை

Published On:

| By Kavi

ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மூன்று மாத அரசியல் படிப்பு படிப்பதற்காகத் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று (ஆகஸ்ட் 28) அதிகாலை லண்டன் புறப்பட்டுச் சென்றார்.

லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சர்வதேச அரசியல் படிப்புக்காக பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 40 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில் ஒருவராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையும் தேர்வு செய்யப்பட்டார்.

இந்தப் படிப்புக்கான செலவை ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகமே ஏற்றுள்ளது.

அந்த வகையில் அரசியல் புத்தாய்வு மாணவர் நிலை (ஃபெல்லோஷிப்) படிப்புக்காக அண்ணாமலை இன்று அதிகாலை சென்னை விமான நிலையத்திலிருந்து லண்டனுக்குப் புறப்பட்டு சென்றுள்ளார். விமான நிலையத்தில் பாஜக நிர்வாகிகள் குவிந்து அவரை வழியனுப்பி வைத்தனர்.

அங்கு மூன்று மாதங்கள் தங்கிப் படிக்கும் அவர் நவம்பர் இறுதியில் மீண்டும் தமிழ்நாடு திரும்புகிறார்.

அண்ணாமலை லண்டன் செல்வதை முன்னிட்டு தமிழக பாஜகவுக்கு புதிய அல்லது தற்காலிகமாகத் தலைவர் நியமிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் லண்டன் சென்றாலும் எனது இதயம் இங்கே தான் இருக்கும்… அங்கிருந்தவாறு கட்சிப் பணிகளைக் கவனிப்பேன். தலைவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் தொலைபேசி மூலம் அறிவுரைகள் வழங்குவேன். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மாணவராக இருந்தாலும் எனது சண்டை அறிக்கை மூலம் தொடரும் என்று கூறியிருந்தார்.

அதிமுகவுக்கும் பாஜகவுக்கும் இடையே மோதல் போக்கு அதிகரித்திருக்கும் நிலையில் லண்டன் சென்றுள்ளார் அண்ணாமலை.

முன்னதாக தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக முதல்வர் ஸ்டாலின் அமெரிக்கா புறப்பட்டு சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

பிரியா

வேலைவாய்ப்பு : தமிழ்நாடு மெர்க்கண்டைல் ​​வங்கியில் பணி!

பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருவிழா: நாளை தொடக்கம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share