ஆவின் பால் விலை எவ்வளவு உயர்ந்தது?

Published On:

| By Selvam

நாளை (நவம்பர் 5) முதல் ஆரஞ்சு நிற ஆவின் பால் பாக்கெட் ஒரு லிட்டர் விலை ரூ.12 உயர்த்தப்பட்டு, ரூ.60-க்கு விற்பனை செய்யப்படும் என்று ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது

இதனால் நிறை கொழுப்பு கொண்ட ஆரஞ்சு பால் பாக்கெட் விலை அரை லிட்டர் ரூ.24-லிருந்து ரூ.30 ஆகவும், ஒரு லிட்டர் ரூ.48-லிருந்து ரூ.60-ஆகவும் விற்கப்படும்.

ADVERTISEMENT

பால் விலை உயர்த்தப்பட்டது குறித்து ஆவின் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“நாளை (நவம்பர் 5) முதல் பசும்பால் கொள்முதல் விலை ஒரு லிட்டர் ரூ.32-லிருந்து ரூ.35-ஆகவும், எருமை பால் கொள்முதல் விலை ஒரு லிட்டர் ரூ.41-லிருந்து ரூ.44-ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த விலை உயர்வின் காரணமாக ஏற்படும் கூடுதல் செலவினத்தை ஈடு செய்ய விற்பனை விலையை உயர்த்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

இருப்பினும் விற்பனை விலையைப் பொறுத்தவரை நுகர்வோர்களின் நலன் கருதி சமன்படுத்தப்பட்ட பால் (toned milk, நீல நிறம்) மற்றும் நிலைப்படுத்தப்பட்ட பால் (standardized milk, பச்சை நிறம் ) ஆகியவற்றின் விலையில் மாற்றமின்றி தற்போதைய நிலையை தொடரும்.

ADVERTISEMENT

ஒரு லிட்டர் மாதாந்திர அட்டைதாரர்களுக்கு நிறை கொழுப்பு பால் லிட்டர் ரூ.46-க்கு விலை மாற்றமின்றி வழங்கப்படும்.

பால் உற்பத்தியாளர்களுக்கு கொள்முதல் விலை உயர்வினை வழங்குவதற்கான ஏற்படும் கூடுதல் செலவினத்தை பகுதியாக ஈடுசெய்யும் வகையில் நடைமுறைப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதால் பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வம்

வேலைவாய்ப்பு : காஞ்சிபுரம் DHS-ல் பணி!

கழிவறை கட்டமைப்பையும் சுற்றுப்புறத்தையும் மேம்படுத்துவது எப்படி?- பகுதி-3

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share