இப்படியும் கதை சொல்லும் BED!

Published On:

| By Minnambalam Desk

பொதுவாக சினிமாவில் நாயகன் நாயகி அல்லது வில்லன் அல்லது ஏதாவது ஒரு பாத்திரத்தின் பார்வையில்தான் கதை சொல்லப்படும் . தென்னை மரம் தன் வரலாறு கூறுதல் எல்லாம் பள்ளிக்கூடத்தோடு சரி.

ஆனால் ஒரு அறையில் உள்ள படுக்கை (BED ) கதை சொன்னால் எப்படி இருக்கும்?

ADVERTISEMENT

வெத்து வேட்டு, பரிவர்த்தனை ஆகிய படங்களைத் தொடர்ந்து இ எஸ்..மணிபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ‘தி பெட்’.. ஸ்ரீநிதி புரொடக்ஷன்ஸ் சார்பாக வி.விஜயகுமார் தயாரித்துள்ளார்.

ஊட்டியில் உள்ள ஒரு காட்டேஜில் இருக்கும் பெட்டின் பார்வையில் கதை சொல்லப்பட்டு இருக்கிறது..

ADVERTISEMENT

வரும் ஜனவரியில் தமிழகமெங்கும் வெளியாக உள்ள இப்படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாகவும், சிருஷ்டி டாங்கே கதாநாயகியாகவும் நடித்துள்ளனர். மற்றும் ஜான் விஜய், பிளாக் பாண்டி, பப்பு, தேவி பிரியா நடித்துள்ள இப்படத்தினை கோவையைச் சேர்ந்த ஆஞ்சநேயா புரொடக்ஷன்ஸ் எனும் புதிய நிறுவனம் வெளியிடுகிறது.

இயற்கை எழில் கொஞ்சும் நீலகிரி மலைப்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியிலும் தேயிலைத் தோட்டங்களிலும் படமாக்கி உள்ளனர்.

ADVERTISEMENT

”ஏனுங்க டைரக்டர் .. இந்த வாசல் , ஹால், மொட்டை மாடி… இதெல்லாம் கதை சொல்லாதுங்களா டைரக்டர்? பெட்ரோமாக்ஸ் லைட்டேதான் வேணுமா?” என்று கேட்கலாம் என்றால்,,,

“ஊட்டியின் கடுங்குளிரில் நள்ளிரவில் படமாக்கப்ப்பட்ட காதல் காட்சிகள் அனைத்தும் இப்படத்தின் உன்னதங்கள்” என்கிறார். அவர் .

அப்ப சரி..

பாத்து பண்ணுங்க.. இப்பல்லாம் குடும்பத்தோடு படத்துக்கு போகவே பயமா இருக்கு.

— ராஜ திருமகன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share