தெலுங்கில் ’மார்ட்டின் லூதர் கிங்’ ஆக மாறிய ’மண்டேலா’!

Published On:

| By christopher

tamil mandela changed into martin luther king

தெலுங்கு சினிமாவில் சிங்கம் 123, காலிஃபிளவர், பஜார் ரௌடி போன்ற ஸ்பூஃப் படங்களில் நடித்து பிரபலமானவர் தெலுங்கு நடிகர் சம்பூர்ணேஷ் பாபு. தற்போது இவரது நடிப்பில் தமிழில் அனைவராலும் மிகப்பெரிய அளவில் பாராட்டப்பட்ட ஓர் ஹிட் படம் ரீமேக் ஆகி உள்ளது.

2021 ஆம் ஆண்டு ஒய் நாட் ஸ்டுடியோ சசிகாந்த் தயாரிப்பில் மடோன் அஸ்வின் இயக்கத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடித்து வெளியான ‘மண்டேலா’ படம் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றது. இந்த படத்தை இயக்கியதற்காக மடோன் அஸ்வினுக்கு சிறந்த அறிமுக இயக்குனருக்கான தேசிய விருதும் வழங்கப்பட்டது.

ADVERTISEMENT

அப்படிப்பட்ட யோகி பாபுவின் ஹிட் படத்தை தான் தற்போது தெலுங்கில் சம்பூர்ணேஷ் பாபு நடிப்பில் “மார்ட்டின் லூத்தர் கிங்” என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர்.

ADVERTISEMENT

மார்ட்டின் லூத்தர் கிங் படத்தையும் ஒய் நாட் ஸ்டுடியோ சார்பில் சசிகாந்த்  தான் தயாரித்துள்ளார். பூஜா அபர்ணா இந்த படத்தை இயக்கியுள்ளார். தற்போது இந்த படத்தின் டீசர் வெளியாகி உள்ளது.

இந்தப் படம் சம்பூர்ணேஷ் பாபுவிற்கு ஒரு நல்ல நடிகர் என்ற பெயரை பெற்று தரும் என்று தெலுங்கு சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

மார்ட்டின் லூத்தர் கிங் டீசரை பார்க்கும்போது மண்டேலா படத்தின் திரைக்கதையை அப்படியே ரீமேக் செய்தது போல தான் உள்ளது. அதுதான் இந்த படத்திற்கும் நல்லது.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

நெல்லையப்பர் கோவில் அருகே இளம்பெண் வெட்டிக்கொலை!

பி.டி.உஷாவின் 39 ஆண்டுகால சாதனை சமன்: யார் இந்த வித்யா ராம்ராஜ்?

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share