அதிதியைப் பார்த்து ஆத்மிகாவுக்குப் பொறாமையா?

சினிமா

மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக அதிதி நடிக்கவுள்ள நிலையில் நடிகை ஆத்மிகாவின் ட்விட்டர் பதிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

‘மண்டேலா’ பட இயக்குநர் அஸ்வின் மடோனா இயக்கும் புதிய படம் ‘மாவீரன்’. இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்கிறார்.

இந்தப் படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளிவரவுள்ளது. தெலுங்கில் இந்தப் படத்திற்கு ‘மாவீருடு’ என தலைப்பிடப்பட்டுள்ளது.

இந்த படத்தில் நாயகியாக பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வ அறிவிப்பை இரு தினங்களுக்கு முன்பு வெளியிட்டது.

மாவீரன் படத்தின் பூஜை நேற்று நடத்தப்பட்டு படப்பிடிப்பு தொடங்கியுள்ளது.

தற்போது முத்தையா இயக்கும் ‘விருமன்’ படத்தில் கார்த்திக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் 12-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஹிப்ஹாப் ஆதி இயக்கத்தில் கடந்த 2017-ம் ஆண்டு வெளியான மீசைய முறுக்கு படம் மூலம் ஹீரோயினாக அறிமுகமான ஆத்மிகா அதிதியை சீண்டும் விதமாக ட்விட்டரில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த பதிவில், செல்வாக்கு உள்ளவர்களுக்கு ஏணியில் ஏற ஈஸியாக வாய்ப்பு கிடைத்து விடுகிறது. ஆனால் மற்றவர்களுக்கு? என குறிப்பிட்டு பாத்துக்கலாம் என பதிவிட்டுள்ளார். நடிகை ஆத்மிகாவின் இந்த ட்விட்டர் பதிவு தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

  • க.சீனிவாசன்

அப்பா பேரைக் காப்பாத்துவேன்: ஷங்கர் மகள் ஷார்ப்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published.