தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே இன்று (ஜூன் 15) அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
வார இறுதி நாட்கள் மற்றும் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு பொதுமக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அந்தவகையில் ஜூன் 21 முதல் ஜூலை 28 வரை வார இறுதி நாட்களில் தாம்பரம் – ராமநாதபுரம் இடையே சிறப்பு ரயில் சேவை இயக்கப்பட உள்ளது.
ஜூன் 21,23,28,30 மற்றும் ஜூலை 5, 7, 12, 14, 19,21, 26, 28 ஆகிய தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மாலை 7 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் காலை 7.50 மணிக்கு ராமநாதபுரத்தை சென்றடையும்.
அதேபோல, ஜூன் 22, 24, 29 மற்றும் ஜூலை 1, 6, 8, 13, 15, 20, 22, 27, 19 ஆகிய தேதிகளில் ராமநாதபுரத்தில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்படும் ரயிலானது மறுநாள் அதிகாலை 3.15 மணிக்கு தாம்பரம் ரயில் நிலையத்தை வந்தடையும்.
வார இறுதி நாட்களில் கூட்ட நெரிசலை கருத்தில் கொண்டு சிறப்பு ரயில் இயக்கப்படுவதால், பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் எப்போது?
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணித்தது ஏன்? எடப்பாடி விளக்கம்!