தொடர் விடுமுறை: ஆகஸ்ட் 15 வரை நெல்லைக்கு சிறப்பு ரயில்கள்!

Published On:

| By Selvam

தொடர் விடுமுறை காரணமாக  நாளை (ஆகஸ்ட் 11) முதல் 15ஆம் தேதி வரை தாம்பரம் – நெல்லை இடையே சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் 11ஆம் தேதி முதல் வரும் 15ஆம் தேதி வரை தொடர் விடுமுறை என்பதால் சென்னையில் இருந்து ஆயிரக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்குச் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தக் கூட்ட நெரிசலை தவிர்க்க தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் மூலம் 1,100 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ரயில் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரயில்களை தெற்கு ரயில்வே இயக்க உள்ளது. நாளை (11ஆம் தேதி) தாம்பரத்தில் இருந்து மாலை 5 மணிக்கு புறப்படும் சிறப்பு ரயில் மறுநாள் காலை 4.15 மணிக்கு நெல்லையைச் சென்றடையும். இதே போல் நெல்லையில் வரும் 12ஆம் தேதி மாலை 5.50 மணிக்கு சிறப்பு ரயில் புறப்பட்டு மறுநாள் காலை 4.10 மணிக்கு தாம்பரம் சென்றடையும்.

இந்த ரயில்கள் செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், திருச்சி, திண்டுக்கல், சோழவந்தான், மதுரை, விருதுநகர், சாத்தூர், கோவில்பட்டி ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ராஜ்

கிச்சன் கீர்த்தனா: சென்னா ரைஸ்

யுபிஎஸ்சி முதன்மை தேர்வு ஊக்கத்தொகை: தமிழ்நாடு அரசு!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share