அரண்மனை 4 : தமன்னாவின் சம்பளம்  எவ்வளவு?

Published On:

| By Kavi

இயக்குநர் சுந்தர் சி-யின் அரண்மனை சீரிஸ் படங்களுக்கென ஒரு தனி ரசிகர் பட்டாளமே உள்ளது.

சமீபத்தில் வெளியான அரண்மனை 4 திரைப்படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று இந்த ஆண்டின் மெகா பிளாக் பஸ்டர் ஹிட் படங்களின் பட்டியலில் இடம் பிடித்திருக்கிறது.

ADVERTISEMENT

இந்த படத்தில் மெயின் ஹீரோவாக சுந்தர்.சி நடிக்க, இவருடன் தமன்னா, ராஷி கண்ணா, யோகி பாபு, VTV கணேஷ், கோவை சரளா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் அரண்மனை 4 படத்தில் நடித்த நடிகை தமன்னாவின் சம்பளம் குறித்த ஒரு தகவல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

ADVERTISEMENT

அரண்மனை 4 படத்தில் நடித்ததற்காக நடிகை தமன்னா 4 – 5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

இந்த படத்திற்கு முன்பு நடிகை தமன்னா நடிகர் ரஜினியின் ஜெயிலர் படத்தில் ஒரு சின்ன கதாபாத்திரத்தை ஏற்று நடித்தது மட்டுமின்றி ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருந்தார். அப்போது ஜெயிலர் படத்திற்காக 3 கோடி ரூபாய் சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

ADVERTISEMENT

ஜெயிலர் படத்தில் தமன்னாவின் கதாபாத்திரமும் அவர் நடனமாடிய பாடலும் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதே போல் அரண்மனை 4 படத்தில் தமன்னாவின் கதாபாத்திரமும் படத்தின் இறுதியில் வரும் “அச்சச்சோ” பாடலுக்கு தமன்னாவின் நடனமும் அனைவரின் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது.

அரண்மனை 4 வெளியாகி இதுவரை உலக அளவில் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கார்த்திக் ராஜா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share