ADVERTISEMENT

உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் டிரம்ப் பேச்சுவார்த்தை- போர் நிறுத்தத்துக்கு தயார் என அறிவிப்பு!

Published On:

| By Mathi

Trump and Ukraine President Zelensky

அமெரிக்கா சென்ற உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து, போர் நிறுத்தத்துக்கு உக்ரைன் தயாராக இருப்பதாக ஜெலன்ஸ்கி தெரிவித்தார்.

உக்ரைன் மீதான ரஷ்யாவின் 3 ஆண்டுகால போரை முடிவுக்குக் கொண்டு வர டொனால்ட் டிரம்ப் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். இதன் ஒரு பகுதியாக ரஷ்யா அதிபர் புதின், அமெரிக்காவுக்கு சென்று டிரம்ப்பை சந்தித்து பேசினார்.

ADVERTISEMENT

இதனையடுத்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்கா சென்று டிரம்ப்பை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து அறிக்கை வெளியிட்ட ஜெலன்ஸ்கி, போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு உக்ரைன் தயாராக இருக்கிறது என்றார்.

டொனால்ட் டிரம்ப் கூறுகையில், போர் நிறுத்தம் என்பது எல்லாம் தேவையில்லை. அமைதிதான் முக்கியம். ரஷ்யாவுக்கு பாதுகாப்பு வழங்குவது பற்றியும் உக்ரைனுக்கு அமைதிப் படை அனுப்புவது பற்றியும் ஆலோசிப்போம் என்றார்.

ADVERTISEMENT

இதனால் ரஷ்யா- உக்ரைன் யுத்தம் முடிவுக்கு வரக் கூடிய சாத்தியங்கள் அதிகரித்துள்ளதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share