அதிமுகவோடு பேசி வருகிறோம்: கூட்டணி பற்றி அமித் ஷா

Published On:

| By Aara

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவோடு பேசி வருவதாகவும், நிச்சயமாக 2026 இல் திமுக அரசு தமிழ்நாட்டில் மக்களால் வேரோடு பிடுங்கி எறியப்படும் என்றும் பாஜக மூத்த தலைவரும், உள்துறை அமைச்சருமான அமித் ஷா கூறியுள்ளார்.

சமீப நாட்களாக அமித் ஷா தமிழ்நாட்டு விவகாரங்கள் பற்றி அடிக்கடி கருத்துகளை வெளிப்படுத்தி வருகிறார். மார்ச் 25 ஆம் தேதி அதிமுக பொதுச் செயலாளார் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவை சந்தித்தார். அதன் பின் மார்ச் 28 ஆம் தேதி பாஜக தலைவர் அண்ணாமலையை அழைத்துப் பேசினார் அமித் ஷா. talk with ADMK Amit sha confirm

இந்நிலையில் நேற்று (மார்ச் 28) டெல்லியில் நடந்த, ’டைம்ஸ் நவ் சம்மிட்’ நிகழ்வில் கலந்துகொண்ட அமித் ஷா, தமிழ்நாட்டில் திமுக அரசு பற்றியும், பாஜக அமைக்க இருக்கும் கூட்டணி பற்றியும் கருத்துகளை வெளிப்படுத்தினார்.

அவர் பேசுகையில், “தமிழ்நாடு ஒரு காலத்தில் மிகவும் முற்போக்கான மாநிலமாக இருந்தது, ஆனால் திமுக அரசின் கொள்கைகளால் இப்போது அது குழப்பத்திற்கு ஆளாகியுள்ளது, இது மக்களை வருத்தப்படுத்தியுள்ளது, அடுத்த சட்டமன்றத் தேர்தலில் திமுகவை வேரோடு பிடுங்க அவர்கள் தயாராக உள்ளனர்.

தமிழ்நாடு அரசு இன்னும் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்வியை தமிழில் தொடங்கவில்லை அதற்கான புத்தகங்களை தமிழில் மொழிபெயர்க்கவில்லை. தமிழை வைத்து அரசியல் செய்வார்களே தவிர, திமுக தமிழ் விரோத கட்சி. 2026 சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஒரு தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஆட்சிக்கு வரும்.

தமிழ்நாட்டில் உள்ள திமுக அரசு ஊழலில் மட்டுமே ஈடுபட்டுள்ளது. இதன் காரணமாக தொழில்களும் இளைஞர்களும் மாநிலத்திலிருந்து இடம்பெயர்ந்து வருகின்றனர்.

நான் சமீபத்தில் தமிழ்நாட்டுக்குச் சென்றபோது மக்களின் நாடித்துடிப்பை என்னால் உணர முடிந்தது” என்று கூறினார் அமித் ஷா. talk with ADMK Amit sha confirm

அதுமட்டுமல்ல திமுக தற்போது கையிலெடுத்துள்ள தொகுதி மறு சீரமைப்பு விவகாரம் குறித்தும் அமித் ஷா இந்த நிகழ்வில் பேசினார்.

“2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள மாநிலத் தேர்தலை மையமாகக் கொண்டு திமுக இந்தப் பிரச்சினையை எழுப்பியுள்ளது. மத்திய அரசு எல்லை நிர்ணயம் குறித்து ஏதாவது சொன்னதா? இப்போது ஏன் அதை எழுப்பினார்கள்? அது தேர்தலுக்கான காரணமாகும். ஐந்து ஆண்டுகளாக, அவர்கள் ஊழலில் ஈடுபட்டார்கள், இப்போது, ​​அவர்கள் திடீரென்று விழித்துக் கொண்டுள்ளனர்.

மக்களவை தொகுதி எல்லை நிர்ணயம் எப்போது மேற்கொள்ளப்பட்டாலும் அதனால், யாருக்கும் எந்த அநீதியும் செய்யப்படாது என்று நான் உங்களுக்கு உறுதியாக சொல்கிறேன். பிரதமர் மோடியும் இதை உறுதியாக என்னிடம் சொன்னார். யாருக்கும் அநீதி ஏற்பட 0.0001 சதவீதம் கூட வாய்ப்பு இல்லை” என்று அமித் ஷா உறுதியளித்தார்.

மேலும் திமுக அரசின் துணை முதல்வர் உதயநிதி குறித்தும் அமித் ஷா கடுமையாகவே பேசியிருக்கிறார். .talk with ADMK Amit sha confirm

”திமுக தலைவரும் தமிழக முதல்வருமான ஸ்டாலின், தனது மகனும் மாநில துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலினை தனது வாரிசாக நியமிக்க விரும்புகிறார். ஏனெனில் திமுகவுக்கு மற்ற அனைத்தையும் விட வம்ச அரசியல்தான் முக்கியம்” என்றார் அமித் ஷா.

தமிழ்நாட்டில் 2026 சட்டமன்றத் தேர்தலுக்காக அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைக்குமா என்ற கேள்விக்கு, “பேச்சுவார்த்தைகள் ​​ நடந்து வருகின்றன. சரியான நேரம் வரும்போது, ​​அதை நாங்கள் வெளியிடுவோம்” என்று கூறினார் அமித் ஷா.

எடப்பாடி பழனிசாமி டெல்லியில் அமித் ஷாவுடனான சந்திப்பு பற்றி கேட்டபோது, ‘மக்கள் பிரச்சினைகள் பற்றி மனு கொடுக்கச் சென்றோம்’ என்று கூறினார். ஆனால் அமித் ஷாவே, ‘அதிமுகவோடு கூட்டணி பற்றி பேசி வருகிறோம்” என்று விளக்கியிருக்கிறார்.

அமித் ஷாவின் தமிழ்நாடு அரசியல் பற்றிய இந்த கருத்துகள், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share