ராமேஸ்வரத்தில் இருந்து நடைப் பயணம்: அண்ணாமலை அறிவிப்பு!
மதுரை அம்பிகா தியேட்டர் அருகே மத்திய அரசின் 9 ஆண்டுகள் சாதனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமான மூலம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று(மே31)மதுரை விமான நிலையத்திற்கு வந்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர் சந்தித்த அவர் பேசுகையில்:
“திராவிட மாடல் என்று சொல்லக்கூடிய எதுவுமே பொய்தான். தோனி இருப்பதால் சிஎஸ்கே அணியை அனைவருக்கும் பிடிக்கும். எனக்கு சிஎஸ்கே அணியில் தமிழர்கள் யாரும் விளையாட வில்லையன்றாலும் பிடிக்கும் .ஆனால் குஜராத் அணியில் 3 தமிழர்கள் விளையாடினார்கள்” என்றார்