விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் இன்று(ஏப்ரல் 19) காலை, தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினைத் தலைமைச் செயலகத்தில் சந்தித்துப் பேசினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவனிடம், வேங்கைவயல் விவகாரம் குறித்து கேள்வி எழுப்பட்ட போது, அவர் செய்தியாளர்களுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அவரிடம், சம்பவம் நடந்து இத்தனை நாள் ஆகிறது? இதுவரை ஒரு குற்றவாளியையும் திமுக அரசு கைது செய்யவில்லை. திமுகவுக்கு ஆதரவாக வி.சி.க செயல்படுகிறதா?” என்று செய்தியாளர்கள் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு…