ரீ ரிலீஸ் ஆகும் விஜய்யின் மாஸ்டர்..! எங்கு தெரியுமா?

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடிகர் விஜய் கூட்டணியில் வெளியான மாஸ்டர், லியோ ஆகிய இரு திரைப்படங்களும் மெகா பிளாக்பஸ்டர் படங்களாக அமைந்தது. ஆனால் இன்றுவரை மாஸ்டர் படம் தான் ரசிகர்களின் ஃபேவரைட் ஆக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

இங்கிலாந்து பிரதமராக முயலும் இந்திய வம்சாவளிஅரசியல்வாதி!

ஒருவர் கருவூலத்தின் சான்சலர் என்று அழைக்கப்படும் நிதியமைச்சர். அவர்தான் இந்திய வம்சாவழியினரான, நாற்பத்தி இரண்டு வயது நிரம்பிய ரிஷி சுனாக். மற்றொருவர் வெளியுறவு அமைச்சர், நாற்பத்தேழு வயதான எலிசபெத் டிரஸ்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: இன்றைய உலகில் செம்பு!

மனித சமுதாயம் தனது நாகரிகத்தில் முதன் முதலாகக் கண்டுபிடித்து தினசரி உபயோகத்திற்கு கொண்டு வந்த முதல் உலோகம் செம்பு என நம்பப்படுகிறது. மிகப் பண்டைய காலத்தில் செப்பு நாணயங்கள் இதற்கு ஒரு சாட்சி. ஆக செம்பு ஆரம்ப காலத்தில் இன்றைய தங்கம் போல மதிப்பு மிக்க ஒரு உலோகமாக இருந்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: காப்பர் காலனியம்

ஐரோப்பாவில் 1500ஆம் ஆண்டுகளின் வாக்கில் ஆரம்பித்த இயந்திரப் புரட்சியானது உலோக மற்றும் தாதுக்களின் வேட்டைகளை ஆரம்பித்து வைத்தது. இந்த இயந்திரப் புரட்சியின் பசிக்குத் தீனி போட வேண்டுமெனில், முதலில் இயந்திரங்கள் தேவை. அதற்கு உலோகங்கள் தேவை. இந்த உலோகங்கள் ஐரோப்பாவை விட ஆப்பிரிக்க, தென்னமெரிக்க, ஆசியக் கண்டங்களில் ஏராளமாக இருந்தன; இருக்கின்றன. இவ்வுலோகங்களை பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஆங்கிலேயப் பெரும் முதலாளிகள் ஐரோப்பிய இயந்திரப் பேட்டைக்குள் கொண்டுவருவதின் மூலமாக லாபம் ஈட்ட முடியும் எனக் கண்டுகொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: காலனியத்தின் வித்துக்களும் விளைவுகளும் !

பிரிட்டனில் உள்ள கறுப்பின மக்களில் ஒரு சாரார் ‘மேகன் அமெரிக்க ஆப்பிரிக்கப் பெண்ணியவாதி’, எனவே அரச குடும்பத்தில் பெண்ணியம் பேசும் ஒரு கறுப்பினப் பெண் குடியேறுவதை 21ஆம் நூற்றாண்டின் இன சமத்துவத்தை நிலை நிறுத்தும் ஒரு பெரு நிகழ்வாகப் பார்த்தனர். இப்பத்தியின் நோக்கம் இன சமத்துவமின்மை என்பது வரலாறு அல்ல; அது பல வடிவங்களில் இன்றும் தொடர்ந்துவருகிறது என்பதை அறியும் ஒரு சிறிய முயற்சி.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்

முற்போக்குவாதிகளும் இடதுசாரி ஊடகங்கள் அறிவுஜீவிகள் இந்தக் கட்சிகளினால் ஏற்படக்கூடிய, ஏற்பட்டுக் கொண்டிருக்கிற நச்சு விளைவுகளை தொடர்ந்து ஊடகங்களின் மூலம் முன் வைக்கின்றனர். இருந்தாலும் பிரிட்டனில் உள்ள ஒரு பகுதியினர் இக்கட்சிகளுக்கு தொடர்ந்து ஆதரித்த வண்ணம் உள்ளனர். இக்கட்சிகள் பிரிட்டனின் பாரம்பரியப் பெருமைகளில் ஒன்றாகக் காலனியத்தை முன் வகிக்கிறது. இப்படிப்பட்ட கட்சிகள் காலனியத்தை ஆதரிப்பது பன்மைத்தன்மை வாய்ந்த பிரிட்டனின் ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மை படைத்தது என இடதுசாரி அறிவுஜீவிகள் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் எடுத்துக் கூறியவண்ணம் உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

மினி தொடர்: ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம், சாத்தியமா? – முரளி சண்முகவேலன்

பிரிட்டனின் லேபர் கட்சியின் தலைவர் ஜெரிமி கோர்பின், இன்னும் வெற்றி பெறவில்லை. ஆனால், பழமைவாத – கன்சர்வேட்டிவ் கட்சியின் அஸ்திவாரத்தை அசைத்துள்ளார். இந்த மினி தொடர், அடிப்படையில், பிரிட்டனின் அரசியல் பொருளாதாரம் பற்றி இருந்தாலும் – இத்தொடரில் அடையாளம் காட்டப்பட்ட பிரச்சினைகள் என்னவோ பல சமூகங்களிலும் காணப்படுகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

மினி தொடர்: ஐக்கிய ராச்சியத்தில் சோஷலிச அற்புதம், சாத்தியமா?-முரளி சண்முகவேலன்

ஜனவரி மாதங்களில் லண்டனில் பனிமூட்டம் மிக அதிகமாக இருக்கும். பகல் 9 மணி வரை 4 அல்லது 5 டிகிரி இருப்பது ஒன்றும் அசாதாரணமானதல்ல. அதிக அளவில் தொழில்நுட்ப வசதி உள்ள விமானங்களே மிகக் கவனமாக ஏறி இறங்க வேண்டும். ஆனால் மிக லகுவாக ஹெலிகாப்டரை நகருக்குள் ஓட்டி வந்த விமானி எம்ஐ சிக்ஸுக்கு அருகில் உள்ள பாட்டர்சீ பூங்கா அருகில் இறக்க யத்தனித்தார். அப்போது ஹெலிகாப்டரின் கத்தி, அருகே உள்ள ஒரு கட்டிட வேலைக்காகப் பொருத்தப்பட்டிருந்த ஒரு ராட்சத க்ரேனுடன் உரசி உடனேயே தீ விபத்தாக மாறியது. விமானியும், காலை வேளையில் சாலையில் சென்று கொண்டிருந்த ஒருவரும் அங்கேயே மாண்டனர். கிட்டத்தட்ட 12-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் படு காயமுற்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

மினி தொடர்: ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா? – முரளி சண்முகவேலன்

போப் ஆண்டவர் ஆட்சிபுரியும் வாடிகன் நகர – நாட்டுக்கு வெளியில் ரோம் நகரத்தில் – சுற்றுலாப் பயணிகள் அதிகம் புழங்கும் இடமான ஸ்பானிஷ் படிகளுக்கு அருகில் வங்கதேச இளைஞர்கள் சீசனுக்குத் தகுந்தாற்போல பொருள் விற்றுக்கொண்டிருப்பதைப் பார்க்கலாம். இவர்களில் பெரும்பாலானோர் சட்ட விரோதமாகக் குடியேறியவர்கள். சாலைகளில் விற்றுக்கொண்டிருக்கும்போதே, திடீரென ஒரு விசில் சத்தம் கேட்கும் அல்லது இவ்வியாபாரிகள் தங்களுக்குள் சைகை மூலம் எல்லைப் போலீஸார் வருவதை தெரிவித்துக்கொள்வர். உடனடியாக அவர்கள் செய்து கொண்டிருக்கும் வியாபாரத்தை அப்படியே விட்டுவிட்டு அனைவரும் ஓடி மறைவர். இது ஒரு தினசரி நிகழ்வு.

தொடர்ந்து படியுங்கள்

மினி தொடர்: ஐக்கிய ராஜ்ஜியத்தில் சோஷலிச அற்புதம் சாத்தியமா? – முரளி சண்முகவேலன்

இந்த வாரக் கட்டுரைக்குச் செல்லும்முன், சில ஒப்புதல் வாக்குமூலங்கள் அளிப்பது நேர்மையாக இருக்கும். இந்த மினி தொடரை எழுதும் நான், உலகமயமாக்கத்தினால் பயனடைந்த எண்ணற்றவர்களில் ஒருவன். குறிப்பாக, ஐரோப்பிய யூனியனின் ஒரு பங்காக இதுவரை இருந்து வருகிற ஐக்கிய ராஜ்ஜியத்தில் உருவாக்கப்பட்ட தாராளமயக் கொள்கையினால் பயனடைந்தவன்.

தொடர்ந்து படியுங்கள்