பள்ளிக்கல்வித்துறையின் கலந்தாய்வு நாளை (செப்டம்பர் 27ஆம் தேதி) முதல் 30ஆம் தேதி வரை நடைபெற உள்ள நிலையில், பள்ளிக் கல்வித்துறையின் அலுவலகங்களில் பணி புரியக்கூடிய மாவட்ட கல்வி அலுவலர்களின் உதவியாளர்கள், கண்காணிப்பாளர்கள், இளநிலை உதவியாளர்கள் உள்ளிட்டோர், 1.6.2022 அன்றைய நிலவரப்படி, மூன்று ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணிபுரிந்து இருந்தால், அவர்கள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. மேலும் கலந்தாய்வு நடத்தி அனைவரும் பணியிட மாற்றம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. […]
தொடர்ந்து படியுங்கள்