ஐபிஎல் பாஸ் வேண்டும்: வேலுமணிக்கு , உதயநிதி சுவாரஸ்ய பதில்!

இந்நிலையில், இதற்கு பதிலளித்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,”4 வருசமா சேப்பாக்கத்துல ஐ.பி.எல் போட்டியே நடக்கல, யாருக்கு டிக்கெட் வாங்கிக் கொடுத்தீங்கனு தெரியல..என்னோட சொந்த செலவுல 150 கிரிக்கெட் விளையாடும் வீரர்களை டிக்கெட் வாங்கி மைதானத்திற்கு அழைத்து செல்கிறேன்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழர்களே இல்லாத சிஎஸ்கே! தடை கேட்கும் பாமக!

தமிழர்களே இல்லாத சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தடை செய்யவேண்டும் என்று சட்டப்பேரவையில் இன்று(ஏப்ரல் 11)பாமக வேண்டுகோள் விடுத்துள்ளது. 16 வது ஐபிஎல் சீசன் கடந்த மார்ச் 31 ஆம் தேதி உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான குஜராத் மாநிலம் அகமதாபாத் நகரில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. ஐபிஎல் கோப்பையை வெல்லும் முனைப்புடன் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ், […]

தொடர்ந்து படியுங்கள்

‘கை கட்டி வேடிக்கை பார்க்கமாட்டோம்’: ஆளுநருக்கு எதிராக முதல்வர் தனி தீர்மானம்!

தினசரி ஒரு கருத்தை தெரிவித்து ராஜ் பவனை அரசியல் பவனாக மாற்றியுள்ளார் ஆளுநர். அவர் அரசியல்வாதி போல் பேசுகிறார். சட்டமன்ற மாண்புக்கு அரசியல் நோக்கத்தோடு இடையூறு செய்தால், கை கட்டி வேடிக்கை பார்த்துக்கொண்டு இருக்க மாட்டோம்

தொடர்ந்து படியுங்கள்

துரைமுருகன் கொண்டு வந்த தனி தீர்மானம்: சட்டமன்ற வாயில்கள் மூடல்!

இந்த தீர்மானத்துக்கு 144 பேர் ஆதரவு தெரிவித்தனர். 2 பேர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இதையடுத்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக சபாநாயகர் அப்பாவு அறிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

’நானும் ஒரு டெல்டாக்காரன்’-நிலக்கரி சுரங்க விவகாரத்தில் ஸ்டாலின் உறுதி!

முதலமைச்சராக மட்டுமின்றி, நானும் ஒரு டெல்டா காரன் என்ற முறையில் அங்கு அறிவிக்கப்பட்டுள்ள மத்திய அரசின் நிலக்கரி சுரங்க ஏலத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காது என்பதை உறுதியாக தெரிவித்துகொள்கிறேன்.” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கரன்ட்டை விட சோறுதான் முக்கியம்: நிலக்கரி விவகாரத்தில் வானதி

ஒரு மனிதனுக்கு சோறு வேண்டுமா, கரண்ட் வேண்டுமா என்று கேட்டால் சோறுதான் முக்கியம். அதில் மாற்றுக்கருத்து இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

பள்ளிக்கல்வி துறைக்கு புதிய 26 அறிவிப்புகள்!

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் அவர்தம் பணிகளைத் திறம்படமுன்னெடுத்துச் செல்லவும், கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து நன்கு அறிந்து கொள்ளவும் நிருவாகத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் வழங்கப்படும். ஓராண்டிற்கு 6,000 தலைமையாசிரியர்கள் என்ற அடிப்படையில் மொத்தம் 35,847 அரசு மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் இதன் வாயிலாகப் பயன் பெறுவர். இத்திட்டத்திற்கென சுமார் 10 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

உதயா மகனோடும் ஒன்றாய் இருப்பேன்: சட்டமன்றத்தை உருக வைத்த  துரைமுருகன்

தொடர்ந்து பேசிய அமைச்சர் துரைமுருகன், “நிச்சயமாக, சண்டை போட்ட பிறகு கவர்னர் டீக்கு அழைத்திருந்தார். நானும் தலைவரும் (மு.க.ஸ்டாலின்) சென்றோம். அப்போது என் வயதைப் பற்றி கேட்டார். அதற்கு முதல்வர், ‘எங்க அப்பாவுடன் 53 வருடங்களுக்கு மேலாக இருந்தவர். இப்போ என்னுடன் இருக்கிறார்’ என்றார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்நாட்டில் பாஜகவுக்கு இடமில்லை! – சட்டமன்றத்தில் போட்டு உடைத்த கே.பி.முனுசாமி

ஏற்கெனவே அதிமுக – பாஜக கூட்டணி உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. சமீபத்தில் அதிமுகவுடன் கூட்டணி என்றால் கட்சி பதவியை ராஜினாமா செய்வேன் என அண்ணாமலை பேசியது சர்ச்சையானது.

தொடர்ந்து படியுங்கள்