இந்நிலையில், லியோவில் இருந்து நடிகை த்ரிஷா வெளியேறிவிட்டதாக ஒரு வதந்தி சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. இந்த குழப்பத்திற்கு த்ரிஷா தான் காரணம். ஏனெனில், லியோவில் நடிப்பது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியானதும், அவரைப் பற்றி நெட்டிசன்கள் வெளியிட்ட பல ட்வீட்களை அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் ரீ-ட்வீட் செய்தார்.ஆனால் தற்போது அந்த ட்வீட்களில் பெரும்பாலானவற்றை அவர் நீக்கியுள்ளார். தற்போது ஒட்டுமொத்த படக்குழுவினரும் காஷ்மீரில் முகாமிட்டுள்ள நிலையில் நடிகை த்ரிஷா மட்டும் மூன்றே நாளில் சென்னை திரும்பினார். இதனால் தான் அவர் லியோ படத்தில் இருந்து விலகி விட்டதாக செய்திகள் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து படியுங்கள்