எனக்கு எழுபது வயதா…மு.க.ஸ்டாலின் உரை!
மார்ச் 1 பிறந்தநாள் என்று சொல்லும்போதுதான் வயது ஞாபகம் வருகிறது. எனக்கு எழுபது வயது என்று சொல்லும்போது சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். கடந்த பிறந்தநாள் விழாவில் ராகுல் காந்தி பேசும்போது, ‘நான் இந்த விழாவுக்காக புறப்பட்டபோது என் தாயாரிடம், ஸ்டாலின் பிறந்தநாள் விழாவுக்காக செல்கிறேன். அவருக்கு என்ன வயது தெரியுமா என்று கேட்டேன். தெரியாதே என்றார். 69 வயது என்றேன். என் தாயார் அதை நம்பவில்லை. பிறகு கூகுள் செய்து பார்த்த பிறகுதான் நம்பினார்’ என்று பேசினார்.
வயது என்பது முகத்தில் இல்லை. மனதில் கொள்கை உறுதியும் இலட்சிய உறுதியும் அன்றாட பணியாக இருக்குமானால் வயதாவதில்லை,. லட்சிய வாதிகளுக்கு என்றும் வயதாவதே இல்லை. உங்கள் ஆதரவால் நாளுக்கு நாள் நான் இளமையாகிக் கொண்டே இருக்கிறேன்.