டிஜிட்டல் திண்ணை: யாருடன் கூட்டணி? தமிழக பாஜக நிர்வாகிகளிடம் மோடி

மொபைல் டேட்டா ஆன் செய்ததும் சில கேள்விகள்  இன்பாக்ஸில் வந்து விழுந்திருந்தன. அவற்றை சீன் செய்ததும் பதிலை விரிவாக டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.  “தமிழ்நாட்டுக்கு ஜூலை 28, 29 தேதிகளில் பிரதமர் மோடி  வருகை தந்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவுக்காக சென்னை வந்த பிரதமர் மோடி குஜராத்தில் இருந்து மாலை 5 மணிக்கு வருவதாக இருந்தார். ஆனால் தாமதமாகத்தான் வந்தார். அதனால், அடுத்தடுத்த அவரது நிகழ்வுகளும் தாமதமாகிவிட்டன. நேரு உள் விளையாட்டரங்கில் […]

தொடர்ந்து படியுங்கள்

கூட்டணி கட்சியினருக்கு திமுக மரியாதை கொடுப்பதில்லை : அண்ணாமலை

சுயமரியாதை பற்றி பேசும் திமுகவினர் கூட்டணிக் கட்சிகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையை மறந்துவிடுவார்கள் போல என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். கடந்த ஜனவரி மாத இறுதியில் கரூர் திமுக அலுவலகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்றது. தொகுதி பங்கீடு தொடர்பாக நடந்த கூட்டத்தில் மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கூட்டணி கட்சி சார்பில் ஜோதிமணி எம்.பி. உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அப்போது திமுக அலுவலகத்திலிருந்து தான் அவமானப்படுத்தப்பட்டதாக வெளியேறினார் ஜோதிமணி. இந்நிலையில் உதயசூரியன் சின்னத்தில் […]

தொடர்ந்து படியுங்கள்

எடப்பாடி பன்னீர் நேருக்கு நேர் : அதிமுக தலைமை அலுவலகம் என்னவாகும்?

இன்று (ஜூலை 11) எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கை தொடர்பாக எடப்பாடி டீம் ஆலோசனை மேற்கொண்டு வருகிறது. சென்னை வானகரத்தில் நடைபெற்ற பொதுக்குழுவில் அதிமுகவின் இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி ஒருமனதாக தேர்தெடுக்கப்பட்டார். அவரை வரவேற்று நத்தம் விஸ்வநாதன், தங்கமணி உள்ளிட்ட பலரும் பன்னீர் செல்வத்தை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என்று வெளிப்படையாக வலியுறுத்துகிறார்கள். பொதுக்குழு உறுப்பினர்களும் பன்னீரை இப்போதே நீக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். […]

தொடர்ந்து படியுங்கள்

பன்னீருடன் பயணித்த ரகசியங்கள்: கே.பி.முனுசாமி அதிரடி அறிவிப்பு!

“ஓ.பன்னீர்செல்வத்துடன் நீண்டகாலம் பயணித்ததே, வேதனையாகவும் வெட்கமாகவும் இருக்கிறது” என அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும், ஈபிஎஸ் ஆதரவாளருமான கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி அணியினரும், பன்னீர்செல்வம் அணியினரும் ஏதோ எதிரெதிர் கட்சிகளில் இருப்பவர்களைப் போல மாறி மாறி சேற்றை அள்ளி வீசிக் கொள்கிறார்கள். அந்த வகையில், ஓபிஎஸ் ஆதரவாளர் கோவை செல்வராஜ், நேற்று (ஜூலை 8) சென்னையில் பேட்டியளித்தபோது… “கிருஷ்ணகிரியில் பால்வளத்துறைக்கு சொந்தமான இடத்தை, கே.பி.முனுசாமியின் மகன் எம்.சதீஷுக்கு 99 ஆண்டுகள் வாடகைக்கு இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் […]

தொடர்ந்து படியுங்கள்

பொதுக்குழுவை தடுக்கத்தான் இந்த ரெய்டு: அதிமுக வழக்கறிஞர்!

2015 முதல் 2021 வரையிலான கால கட்டத்தில் உணவுத் துறை அமைச்சராக இருந்த காமராஜ் வருமானத்துக்கு அதிகமாக 500 சதவிகிதம் அதாவது ரூ. 58.44 கோடி சொத்து குவித்துள்ளதாகக் கூறி லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை நடத்தி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

நீதிமன்றம் வந்ததே தவறு: பன்னீருக்கு எதிராக வாதாடிய அதிமுக

வரும் ஜூலை 11 ஆம் தேதி நடப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள அதிமுக பொதுக் குழுவை தடை செய்ய வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வழக்கு விசாரணை நேற்று தொடங்கி இன்றும் சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. பன்னீர்செல்வம் தரப்பும், எடப்பாடி பழனிசாமி தரப்பும் தத்தமது வாதங்களை முன் வைத்த நிலையில் இன்று (ஜூலை 8) அதிமுக சார்பில் மூத்த வழக்கறிஞர்  எஸ்.ஆர்.ராஜகோபால்  நீதிமன்றத்தில் ஆஜராகி தன் வாதங்களை வைத்தார்.  “எந்த பிரச்சினை தொடர்பாக தீர்மானம் கொண்டுவரவும், […]

தொடர்ந்து படியுங்கள்