அப்பாவி விவசாயியும் அடேங்கப்பா சூதாட்டமும் !
இன்றமைந்திருக்கும் முதலமைச்சரை போல அமைதியும், பொறுமையும் மென்மையான அணுகுமுறையினையும் கொண்டதோர் முதலமைச்சரை இதுகாறும் தமிழ்நாட்டின் சட்டசபை கண்டதில்லை.
இன்றமைந்திருக்கும் முதலமைச்சரை போல அமைதியும், பொறுமையும் மென்மையான அணுகுமுறையினையும் கொண்டதோர் முதலமைச்சரை இதுகாறும் தமிழ்நாட்டின் சட்டசபை கண்டதில்லை.
திராவிடத் தத்துவத்தை முன் மொழிந்தவர் பேரறிஞர் அண்ணா எனில், அதனை ஆட்சி வழி நின்று ஒருங்கே செலுத்தி செழிக்கச் செய்தவர் கலைஞர் எனில், அதனை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செலுத்தும் ஆளுமை படைத்தவராக நின்றமைபவர் இன்றைய முதலமைச்சர் மாண்புமிகு மு.க.ஸ்டாலின் என்பது எனது துணிபு!
வீசியடிக்கும் வங்கக் கடலின் உப்புக் காற்றில் பார்த்தசாரதிக் கோயில் துளசி வாசமும் – ஐஸ் அவுஸ் மசூதியின் பாங்கொலியும் கலந்து கட்ட எந்த நேரமும் பரபரப்பாகவே இயங்கிக் கொண்டிருக்கும் திருவல்லிக்கேணி!
மொத்த கிராமமும் அயர்ந்து இருந்த அந்த அதிகாலை நேரத்தில், ஏறத்தாழ 20 டிகிரி சாய்மானத்தில், மடமடவென மலையிறங்கி வந்து கொண்டிருந்தது அந்த நாசகாரம்…
திருவல்லிக்கேணி ஸ்டார் தியேட்டர் அருகே செம்மறி ஆடுகள் மந்தை மந்தையாக வந்து கூடினால், ‘பக்ரீத்’ காலம் நெருங்குகிறது என அர்த்தம் !
எதிர்மறைச் சிந்தனை கிஞ்சித்தும் இல்லாது முற்றிலும் நேர்மறைச் சிந்தனையோடு இதனைத் தங்களுக்கு எழுதுகிறேன். தாங்களும் அவ்வாறே கொள்ள வேண்டுமாய் விழைகிறேன்.
சில நாட்களுக்கு முன்னர் திமுகவின் இளைஞர் அணி செயலாளரும் – தமிழ்நாட்டு அரசாங்கத்தின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சருமான மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்களது குறிஞ்சி இல்லத்தில் முதலைமைச்சர் நீங்கலாக திமுகவின் ஒட்டு மொத்த மூத்த அமைச்சர்களும் கூடியிருந்தனர்.
கொட்டித் தீர்த்த மிக்ஜாம் மழையினைக் குறித்து எத்தனை ஆட்சேபணைகள் இங்குண்டோ அத்தனையும் எனக்குள்ளும் உண்டுதான் ஆயினும் அதற்கு மேலும் சில சங்கதிகள் உண்டு.
இளையோரே, உங்களுக்காகத்தான் பார்த்துப் பார்த்து சேர்த்து வைத்திருக்கிறார் சிலம்பொலி செல்லப்பனார். அந்தப் புதையலைக் கட்டி எடுத்துக் கொள்ளுங்கள். தமிழகத்தை வளமார்ந்த பூமியாக எட்டி எடுத்து வெல்லுங்கள்.
உலக கவிகளுக்கெல்லாம் உன்னதக் கவியான காவிரித் தென்கரையில் உதித்த கவிச்சக்கரவர்த்தி கம்பரோ நிலாவைத் தன் நன்றிக்கு உவமைப்படுத்தி உருகுகிறார். இராமனின் பெரும் புகழைத் தான் பாடக் காரணம் சடையப்ப வள்ளலின் பெருந்தனமும் பேராதரவும்தான் என்பவர் நிலாவினை – அதன் ஒளியினை இப்படியாகக் கொண்டாடுகிறார்..
அந்தப் பாசம்தான் பேராசிரியரின் பேரடையாளம் !
இதோ, பேராசிரியரின் நெடுஞ்சிலைக்கு முன் நிற்கிறேன்.
அது, சிலையல்ல, அல்ல !
எட்டரை அடி உயர திராவிடப் பட்டறை என்றே கொள்கிறேன்
அன்றந்த நாளில் மைலாப்பூர் லக்ஷ்மி லாட்ஜின் 5 ஆம் எண் அறையை எனது தந்தையார் தனது அலுவலகமாக வைத்திருந்த அதே காலத்தில் 1 ஆம் எண் அறையில் மாருதி சார் இருந்தார்.
கொத்துக் கொத்தாய்
மலையிறங்கிவரும்
நச்சரவங்களைப் போல்தான்
அந்த வீடியோவில்
மணிப்பூர் நபும்சகர்கள்
வந்து கொண்டிருந்தார்கள்…
இரண்டு
அப்பாவி முயல்களை
விரட்டியபடி !
டைட்டானிக் பெருங்கப்பல் மூழ்கி ஏறத்தாழ 111 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ‘டைட்டன்’ எனுமந்த நீர்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலில் சிக்கி மில்லி செகண்டுக்குள் சர்வ நாசமாகிப் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
கோலாகலமாக இன்று நூற்றாண்டு காணுமெங்கள் திராவிடப் பேராசானை – கோடிக்கணக்கான திராவிட உடன்பிறப்புகளுக்கு நல்வழி காட்டி நின்ற நாயகனை – நெஞ்சம் குழைய நெடுஞ்சாண் கிடையாக வீழ்ந்து வணங்குகிறேன்.
ஆட்டுக்கு தாடி போல எனச் சிறுநகையாடினாலும் அண்ணா, கலைஞர், இன்றைய முதல்வர் உட்பட திராவிடத் தலைவர்கள் எவரொருவரும் ஆளுநர் எனுமந்தப் பதவியை எந்த நாளிலும் மறுதலித்ததில்லை. அவமதித்ததில்லை.
அன்னைத் தமிழை ஆராதிக்க ஆராதிக்க அல்லல் ஒழியும் – ஆயுள் கூடும் என்பாராம் அன்றைய சேலம் ஜில்லாவில் சகடமெனச் சுற்றிக் கம்பராமாயணப் பிரசங்கம் செய்த வேங்கட சுப்ரமண்ய பாரதி.
இந்திய சுதந்திரப் போராட்டத்தில் 1885 ல் துவங்கி பெரும்பங்கு வகித்தது காங்கிரஸ் கட்சி என்பதை எவராலும் மறுத்துவிட முடியாது. விடுதலைக்கு பிறகு தனிப்பெரும் கட்சியாக அது தென்னகம் உட்பட சகல இந்தியத்தையும் ஒன்று பட ஆட்சி செய்து கொண்டிருந்தது.
தனக்கான பேராண்மையை காப்பாற்றி வைத்தால்தான் ஜனநாயகத்தின் நான்காம் தூண் எனும் பட்டம் அதற்குப் பொருந்தும். அதை வரையறுத்து வைக்காமல் இப்படியாக நீர்த்துப் போக விட்டுக் கொண்டேயிருந்தால் ஒரு கட்டத்தில் பத்திரிகை எனும் தூணை ஜனநாயக மண்டபம் மறுதலித்து விடக் கூடும்!
வறுமை தொலைந்தால் போதும் என பிறந்த மண்ணை விட்டகன்று ஓடோடி வரும் அந்த உழைக்கும் வர்க்கத்தினரின் அல்லாடலுக்குள் அப்படியொரு குயுக்தியான எண்ணத்தைப் பொறுத்திப் பரப்புவது அநாகரிகமல்லவா?
அந்த மனிதன் இந்த மண்ணுக்கு செய்த நலமென்ன எனக் கண்டு நன்றி பாராட்டி நிற்பதே ஒரு நாகரிக சமுதாயத்துக்கு அழகாகும். வங்கக் கடலோரம் நிற்கப் போவது அறிவாயுதம். அதற்கு எதிராக அப்பாவி ஜனங்களிடம் பொய்யாடி திளைப்பதென்பது அநாகரிகம்.
கடந்த நாட்களில், குடிநீர் தொட்டிகளை குறிவைத்தபடி தொடர்ந்து எழுந்து வரும் செய்திகள் ஆட்சியையும் அறிவுலகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வைத்திருக்கின்றன.
எனது வாழ்நாள் வேட்கையான வேலுநாச்சியார் வெளிப்பாடு குறித்தானதொரு நிறைவான பணிக்காக மும்பை சென்றிருந்தேன்.
இந்த முறை இரு வார காலம் அங்கே தங்க நேர்ந்து விட்டது. அந்த பதினைந்து நாட்களில் எனக்கேற்பட்ட அதிர்ச்சிகளும் – ஆச்சரியங்களும் பலப்பல…
இலக்கிய உலகின் ஞானப் பெட்டகம் ஒன்று தமிழ் மண்ணில் இருந்து அநியாயமாகப் பிடுங்கப்பட்டு விட்டது. ஞாயிறு கடந்த அந்த திங்கள் நாளில் எங்கள் திராவிடச் சூரியன் ஒன்று மேற்கு திசைக்குள் நிரந்தரமாக பாய்ந்தே விட்டது.
இந்தியம் என்பது மிகப் பரந்துபட்டது. அதனை ஓர் குடையின் கீழ் ஆள முற்படுவது மிக மிகக் கடினமானது. கொடுங்கோல் செய்த முகலாய மாமன்னர்களாலும் ஏகாதிபத்தியக் கிழக்கிந்தியக் கம்பெனியினராலும் கூட முடியாமல் போன பெருங்கனவு அது.
திருவள்ளுவர் தோன்றிப் பொலிந்ததாகக் கொள்ளப்படும் அந்த கி மு 31ல் தமிழகத்தில் எந்த மதம் வழக்கில் இருந்திருக்கக் கூடும் ? அன்று, ஜைன பௌத்த மதங்களோடு போராடி நின்ற மதம் எதுவாக இருந்திருக்கக் கூடும் என்பதில் இருவிதமான கருத்துக்கள் நிலவுகின்றன.
பழ வண்டி தள்ளுபவரானாலும் – வானமே கூரையாக தெருவோரம் அமர்ந்து செருப்பு தைப்பவரானாலும் தீபாவளி நாளை விட்டுக் கொடுக்க விரும்ப மாட்டார். நடைபாதைக் கடைகளை நாடியாவது புதுத்துணி எடுக்காமல் விடமாட்டார்.
கிடைத்த வாழ்வைப் பயன்படுத்தி எழுந்து நில்லுமின்…” என ஆதூரத்தோடு அறிவுறுத்துகிறார் மெய்ஞானப் பேராசான் திருமூலர்.
திருமூலர் எடுத்துரைத்ததை உணரத் தவறி விட்ட அந்த அருமை மகள் தூரிகை
ஸ்ரீராம் சர்மா
சிறுகுடி என்னும் ஊரில் வாழ்ந்த பண்ணன் என்பான் அக்காலத்தில் பெருங் கொடையாளியாக திகழ்ந்தவன். தான் கொண்டதை இல்லாதோருக்கு அளித்து அளித்தே நெடுங்கீர்த்தி கொண்ட பெருமகன்
எந்த பிள்ளை நல்ல பிள்ளை ? பெற்றவரும் பிறந்த பொன்னாடும் பெருமை கொள்ளத்தக்க வகையில் வளர்ந்து வாழ்வதுதான் நல்ல பிள்ளைக்கான அழகு!