செந்தில் பாலாஜி கேஸ் டைரி : புட்டு புட்டு வைத்த அண்ணாமலை

செந்தில் பாலாஜிக்கும், சண்முகத்துக்கும் எந்த வித தொடர்பும் இல்லை. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக செந்தில் பாலாஜியை முதல் குற்றவாளியாகவும், சண்முகத்தை மூன்றாவது குற்றவாளியாகவும் சேர்த்துவிட்டனர் என்று வாதத்தை முன்வைக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

சபரீசன் செந்தில் பாலாஜியை பார்த்தது ஏன்? சி.வி.சண்முகம்

முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் இன்று(ஜூன் 14) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், “தஞ்சாவூரில் இரண்டு பேர் அரசு விற்கும் மது பானத்தை வாங்கி குடித்து விட்டு இறந்துபோனார்கள். அவர்களின் உடற்கூறு ஆய்வு நடைபெறுவதற்கு முன்னதாகவே அவர்கள் சயனைடு சாப்பிட்டு இறந்து விட்டதாக காவல் துறை சொல்கிறது. உலகத்திலேயே சயனைடு சாப்பிட்டுவிட்டு மூன்று மணி நேரத்திற்கு பிறகு இறந்த போனர்வர்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறார்கள். அதை தொடர்ந்து மதுரை மேலூரில் இரண்டு பேர் டாஸ்மாக்கில் மது அருந்தி இறந்துள்ளனர்.
நேற்று மயிலாடுதுறையில் இரண்டு பேர் இறந்துள்ளனர். டாஸ்மாக் மதுவை அருந்தி உயிரிழந்தால் அதற்கு சயனைடு தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

மருத்துவமனையில் செந்தில் பாலாஜியை சந்தித்த மு.க.ஸ்டாலின்

ஓமந்தூரார் மருத்துவமனைக்குச் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்து உடல்நலம் குறித்து விசாரித்தார். அவருடன் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன் மற்றும் எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா உள்ளிட்டோர் சென்று வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத் துறை விசாரணை என்றால் நெஞ்சு வலி வருமா?: ஜெயக்குமார் கேள்வி!

அவர் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டுகளில் கள்ளச்சாராய சாவுகள் நடந்தன. 2 ஆயிரம் சட்ட விரோத டாஸ்மாக் பார்கள் மூலம் 20 ஆயிரம் கோடி ரூபாய் கொள்ளையடுத்துள்ளார். அரசின் கோடிக்கணக்கான வருவாய் செந்தில் பாலாஜியின் குடும்பத்துக்கு சென்றுள்ளது. இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
டாஸ்மாக்கில் இருந்து வரும் ட்ரன் ஓவரில் இருந்தும் மாதம் 50, 60 கோடி ரூபாய் கொள்ளை அடித்திருக்கிறார். சில்லறை விற்பனையில் ஒரு பாட்டிலுக்கு 10 ரூபாய் கூட வைத்து விற்பனை செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜியை சந்திக்க புறப்பட்டார் முதல்வர்!

அமைச்சர் செந்தில் பாலாஜியை பார்ப்பதற்காக சென்னை ஓமந்தூரார் மருத்துமனைக்கு புறப்பட்டார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு தொடர்புடைய இடங்களில் நேற்று அமலாக்கத் துறை சோதனை நடத்தியது. பின்னர், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது திடீரென செந்தில்பாலாஜிக்கு நெஞ்சுவலி ஏற்ப்பட்டதை அடுத்து அவர் சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று நள்ளிரவு முதல் தமிழக அமைச்சர்கள் 16 பேர் செந்தில்பாலாஜியை மருத்துவமனையில் சென்று பார்த்து […]

தொடர்ந்து படியுங்கள்

”இது கொடுங்கோல் ஆட்சி முறை”-சீமான் கண்டனம்!

இது தொடர்பாக இன்று (ஜூன் 14) செய்தியாளர்களிடம் பேசிய சீமான், “அமைச்சர் செந்தில் பாலாஜியின் கைது எதிர்பார்த்ததுதான். கைது என்றால் நெஞ்சுவலி வருவதையெல்லாம் நிறைய தெலுங்கு படத்தில் பார்த்துள்ளோம். அப்படியென்றால் ஒவ்வொரு கைதிக்கும் நெஞ்சுவலி வர வேண்டும். தேர்தல் நெருங்க நெருங்க இதுபோன்ற பல வேலைகளை செய்வார்கள். தன்னாட்சி அமைப்புகள் ஆட்சியாளர்களின் 5 விரல்கள் போல் செயல்படுகின்றன. என்னை பிடிக்கவில்லை என்றால் நாளை என் வீட்டிலும் ரெய்டு வரலாம். அமைச்சர் செந்தில் பாலாஜி கைது நடவடிக்கை மத்திய அரசின் கொடுங்கோல் ஆட்சி முறையாகும். இந்த அடக்குமுறை சர்வாதிகார ஆட்சி இல்லை இது கொடுங்கோலாட்சி முறை. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டவுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் குணமாகி வர வேண்டும். மத்திய அரசு மிரட்டி அச்சுறுத்தும் பாணியில் பணிய வைக்கும் முறைகளில் இதுவும் ஒன்று” என கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

“செந்தில் பாலாஜி சுயநினைவில் இல்லை”-சேகர்பாபு

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் தொடர் விசாரணை நடைபெற்ற போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டு தற்போது சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

ஐசியுவில் செந்தில் பாலாஜி : மருத்துவமனைக்கு கே.என்.நேரு வருகை!

செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர்கள் எ.வ.வேலு, உதயநிதி, சேகர்பாபு மா.சுப்பிரமணியன் உள்ளிட்டோர் வந்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

‘அமலாக்கத்துறையின் செயல் மனித உரிமை மீறல்’ : அமைச்சர் ரகுபதி

ஒரு அமைச்சர் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார். அவர் கைது செய்யப்பட்டாரா? உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளாரா? எதற்காக ஐசியுவில் வைத்திருக்கிறோம். இதையெல்லாம் அமலாக்கத் துறை தெரிவிக்க வேண்டும்.
நாம் ஜனநாயக நாட்டில் இருக்கிறோமா என சந்தேகம் இருக்கிறது. அத்து மீறி நடந்துகொண்டிருக்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

செந்தில்பாலாஜி கைது: முதல்வர் ஆலோசனை!

போக்குவரத்து துறையில் வேலைவாங்கித் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் சென்னை வீடு உள்பட இடங்களில் நேற்று காலை முதல் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வந்தனர்

தொடர்ந்து படியுங்கள்