செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு… வெள்ள அபாய எச்சரிக்கை!
சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கக் கூடிய செம்பரம்பாக்கம் ஏரி நிரம்பும் நிலையில் இன்று (அக்டோபர் 8) 100 கன அடி உபரி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து அடையாறு ஆற்றின் கரையோரத்தில் வசிக்கும் மக்களுக்கு முதல் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.