அறிமுகம் கொடுத்த தயாரிப்பாளர் மரணம்: ராதிகா, பாரதிராஜா கண்ணீர்!
தமிழ்சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவராக வலம் வந்த எஸ்.ஏ.ராஜ்கண்ணு(வயது 77) உடல்நலக்குறைவால் நேற்று (ஜூலை 11) காலமானார். தமிழ் திரையுலகில் காலத்தால் அழியாத பொக்கிஷமாக பார்க்கப்படும் திரைப்படம் 1977ஆம் ஆண்டு வெளிவந்த ’16 வயதினிலே’ இந்த படத்தின் மூலம் இயக்குநர் இமயம் என்று கொண்டாடப்படும் பாரதிராஜாவை ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியவர் தயாரிப்பாளர் எஸ்.ஏ.ராஜ்கண்ணு. பாரதிராஜாவுக்கு மட்டுமின்றி அதில் நடித்த கமல், ஸ்ரீதேவி, ரஜினி ஆகியோருக்கும் அவர்களது வாழ்வில் மறக்கமுடியாத படமாக அது அமைந்தது. 16 வயதினிலே மட்டுமின்றி கிழக்கே…