காங்கிரஸிலிருந்து ரூபி மனோகரன் தற்காலிக நீக்கம்!

இது தொடர்பாக ரூபி மனோகரனுக்கு காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் தலைவர் கே.ஆர்.ராமசமி அனுப்பியுள்ள கடிதத்தில்
”சென்னை சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற விரும்பத்தகாத சம்பவங்கள் குறித்து நேரில் ஆஜாராகி விளக்கம் அளிக்க கடந்த நவம்பர் 17 ஆம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடிவடிக்கை குழு உங்களுக்கு கடிதம் அனுப்பியிருந்த நிலையில், காலாவகாசம் கேட்டும் மற்றும் உங்கள் கருத்துக்களை குறிப்பிட்டும் தாங்கள் அனுப்பிய கடிதத்தை கிடைக்கப்பெற்றோம். கடிதத்தில் நீங்கள் குறிப்பிட்டிருந்த கருத்துக்கள் ஏற்கக்கூடியது அல்ல என தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கை குழு முடிவெடுத்துள்ளது. அடுத்து நடைபெறவுள்ள ஒழுங்கு நடவடிக்கைக் குழு கூட்டத்தில் தாங்கள் தகுந்த ஆதாரங்களுடன் நேரில் ஆஜராகி உரிய விளக்கத்தை அளிக்க வேண்டும் . அதுவரை தாங்கள் கட்சியில் இருந்து தற்காலிகமாக இடைநீக்கம் செய்யப்படுவதாக தமிழ்நாடு காங்கிரஸ் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிவிக்கிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்