“இந்தியா: மோடி என்ற கேள்விக்குறி” – பிபிசி ஆவணப்படம் கூறுவது என்ன?

ஒரு நாட்டின் அரசு, இன்னொரு நாட்டின் அரசை விமர்சித்தால், இன்னொரு நாட்டின் உள் நாட்டு பிரச்சினையில் தலையிட்டால் அதைக் கண்டிக்கலாம். ஆனால் ஒரு நாட்டின் குடிமைச் சமூகமோ, ஊடகமோ எந்த நாட்டின் பிரச்சினையையும் பேசலாம், எழுதலாம். அதைக் கண்டிக்க முடியாது.

தொடர்ந்து படியுங்கள்

இந்துத்துவம் ஏன் காதலர் தினக் கொண்டாட்டத்தை எதிர்க்கிறது?

இந்து கடவுளர்களை வழிபடுபவர்கள் எல்லாம் இந்துத்துவ அரசியலை ஏற்பவர்கள் அல்லர். ராம பக்தரான காந்தியையே எதிரியாகக் கருதிக் கொன்றது இந்துத்துவம்.

தொடர்ந்து படியுங்கள்

இந்துத்துவ சாதனைகள்: இமாலய ஊழலும், இரக்கமற்ற படுகொலைகளும்!

குஜராத் முதல்வராக 2002ஆம் ஆண்டு மோடி எப்படி கொலைவெறி தாண்டவத்தை மூன்று நாளுக்கு அனுமதித்தார் என்று சாட்சி சொன்னதற்காக பொய் வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட காவல் அதிகாரி சஞ்சீவ் பட்டிற்கு நீதி கிடைக்கத்தான் வேண்டும்.

தொடர்ந்து படியுங்கள்

காந்தி கொலையும், ராமர் கோயிலும்: ஒரு கருத்தியலின் இரு வெளிப்பாடுகள்!

காந்தி ராமர் மேல் மிகுந்த பக்தி கொண்டிருந்தார். அவருடைய விருப்பத்துக்குரிய இறை வணக்கப் பாடல் “ரகுபதி ராகவ ராஜாராம், பதீத பாவன சீதாராம்” என்ற பாடலாகும். அதில் அவர் “ஈஷ்வர் அல்லா தேரோ நாம்” என்ற வரியையும் சேர்த்துக்கொண்டார். அதாவது ஈசுவரன், அல்லா போன்ற பெயர்களுக்கும் உனக்கு உண்டு என்று கூறினார்.

தொடர்ந்து படியுங்கள்

இருபத்தெட்டு அரசுகளுக்கு ஒரே தேர்தல் சாத்தியமா?

உலக கூட்டாட்சி குடியரசை முன்மொழிந்த அரசியல் மேதை, பேரறிஞர் அண்ணாவினை தங்கள் கட்சி பெயரில் வைத்துக்கொண்டுள்ள அ.இ.அ.தி.மு.க அணிகள் போட்டிப் போட்டுக்கொண்டு “ஒரே நாடு, ஒரே தேர்தலை” ஆதரிக்கும் அவலத்தினை என்னவென்று சொல்வது? கட்சி பெயரையாவது மாற்றிவிடுங்கள், அண்ணா பெயரை அவமானப்படுத்தாதீர்கள் என்றுதான் கூற முடியும்.  

தொடர்ந்து படியுங்கள்

ஆரியத்தின் பதற்றம்: ஆளுநரின் சனாதன தர்ம புரட்டு

அவர் பேசியதில் மிகவும் புதுமையான ஒரு புரட்டு என்னவென்றால் சனாதன தர்மம் தமிழகத்தில்தான் தோன்றியது என்பதாகும். இது போன்ற ஒரு கருத்தை இதுவரை யாரும் கூறியதில்லை. இவ்வாறு கூறுவதற்கு ஆளுநர் எந்த ஆதாரமும், விளக்கமும் அளிக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

திராவிட இந்தியா: சேஷைய்யங்கார் சொல்வதையாவது கேட்பாரா ஆளுநர்?

பாரதீய ஜனதா கட்சியின், ஆர்எஸ்எஸ்ஸின் பிற்போக்கு அரசியலுக்கு உடன்படாமல் இருப்பதை ஏதோ தேச நலனுக்கு எதிராக இருப்பதாக ஆளுநர் திரித்துக் கூறுவதை எளிதில் அனைவரும் புரிந்துகொள்வார்கள்

தொடர்ந்து படியுங்கள்

இன்னுமொரு தேசிய கட்சி தேவையா? சாத்தியமா?

இந்திய தேசிய காங்கிரஸ் பலவீனமடைந்து விட்டது என்றும், அதனால் காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக இன்னொரு தேசிய கட்சியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம், கருத்து, முனைப்பு பலரிடம் காணப்படுகிறது. இது காலத்திற்கு பொருந்தாத சிந்தனை எனலாம். மூன்றாவது தேசியக் கட்சி என்பது தேவையுமில்லை; சாத்தியமும் இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

கலையின் மனசாட்சி: நடாவ் லபீட் என்ற கலைஞனும், காஷ்மீர் ஃபைல்ஸ் திரைப்படமும் 

ஒரு வன்முறை நிகழ்வை காட்டும் போது பார்வையாளர்கள் உணர்ச்சிவசப்பட்டு வன்முறை எண்ணங்களை பெறக்கூடாது. மாறாக வன்முறையை தவிர்க்க நினைக்க வேண்டும். அல்லது நாடகீயமானதாக வன்முறையை விலகி நின்று உணரவேண்டும். அன்னியப்பட வேண்டும். ஒரு குறிப்பிட்ட சமூக அடையாளத்தை வெறுக்கும்படி காட்சிகளை அமைத்தால் அது பாசிச படமே. 

தொடர்ந்து படியுங்கள்