கிச்சன் கீர்த்தனா: ராகி ஸ்வீட் சேமியா
அனைவருக்கும் ஏற்ற இந்த ராகி ஸ்வீட் சேமியாவிலுள்ள ராகி, எலும்புகளை பலமாக்கும். பற்கள் வலுவாகும். உடலில் உள்ள தேவையற்ற சதையைக் குறைக்க உதவும். நாட்டுச் சர்க்கரை அதிக அளவு இரும்புச்சத்து நிறைந்தது. ஏலக்காய், செரிமானத்துக்கு உதவும். முந்திரியில் உள்ள வைட்டமின்கள் மற்றும் மெக்னீசியம் எலும்புகளை வலுவடையச் செய்வதோடு புற்றுநோய் செல்கள் உருவாவதையும் தடுக்கும்.