முதல்வரை சந்தித்த பிரக்ஞானந்தா
இந்நிலையில் குடியரசுத் தலைவரிடம் அர்ஜூனா விருது பெற்றுள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா, இன்று (டிசம்பர் 6 ) சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றார். இதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பிரக்ஞானந்தா ‘தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சிறப்பாக இருந்ததாக வீரர்கள் பலரும் கூறினார்கள். பெருமையாக இருக்கிறது. அதனை ஏற்பாடு செய்து நடத்திய தமிழக அரசுக்கு நன்றி. உலகத்தின் நம்பர் 1 செஸ் வீரராக வர வேண்டும் என்பதே என் கனவு’ என்று கூறினார்
தொடர்ந்து படியுங்கள்