ஆன்லைன் சட்ட மசோதா ஒப்புதல்: ஆர்ப்பாட்டத்திற்கு பதிலாக கண்டன பொதுக்கூட்டம்!
இது மதச் சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சிகளுக்கு கிடைத்த முதல் வெற்றி. எனினும், இன்னும் ஆளுநரால் கிடப்பில் போடப்பட்டுள்ள மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்படாததாலும், மேலும் தமிழ்நாடு ஆளுநர் ஸ்டெர்லைட் பிரச்சினைக் குறித்தும் மற்றும் சனாதன ஆதரவு பேச்சுக்கள் குறித்தும் எந்தவிதமான வருத்தமும் விளக்கமும் அளிக்காத காரணத்தினால், ஏப்ரல் 12 ஆம் தேதி அன்று மதச்சார்பற்ற கூட்டணிக் கட்சிகளின் சார்பில் ஆளுநர் மாளிகை முன்பு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்த கண்டன ஆர்ப்பாட்டம், அதே 12-4-2023 (புதன்கிழமை) அன்று மாலை 5.00 மணியளவில், சென்னை, சைதாப்பேட்டை, தேரடித் திடலில் “மாபெரும்கண்டன பொதுக்கூட்டமாக” நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்