அப்பாவிகளை சுட்டுக் கொன்ற ஆர்.பி.எஃப் வீரர்… மன நோயாளியா? மதவாத நோயாளியா?
அதோடு நில்லாமல், சுட்டுக்கொல்லப்பட்டவர் தனது காலுக்கடியில் ரத்தவெள்ளத்தில் உயிருக்கு போராட, அவரை பாகிஸ்தானி என்றும், மோடிக்கு ஓட்டுப்போடுங்கள் என்றும் சற்றும் மனசாட்சி இல்லாத மிருகமாய் அந்த ஆர்.பி.எஃப் வீரர் துப்பாகியுடன் பேசும் வீடியோ ஒன்று சமூகவலைதங்களில் வெளியாகி வெறுப்பு பிரச்சாரத்தின் அடையாளமாய் மாறி நிற்கிறது.