நீட் தேர்வை எப்படி அணுகுவது?
நீட் தேர்வு சரியா, தவறா என்பதை இரண்டு கோணங்களில் அணுகலாம். ஒன்று நீட் தேர்வின் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பதை கடந்த ஏழு ஆண்டுகள் அனுபவத்திலிருந்து ஆராய்ந்து அறியலாம்.
நீட் தேர்வு சரியா, தவறா என்பதை இரண்டு கோணங்களில் அணுகலாம். ஒன்று நீட் தேர்வின் நோக்கம் நிறைவேறி உள்ளதா என்பதை கடந்த ஏழு ஆண்டுகள் அனுபவத்திலிருந்து ஆராய்ந்து அறியலாம்.
உயர்கல்வி நிறுவனங்கள் அனைத்தும், முதலாம் ஆண்டு மாணவர் வருகையின்போது, மிகவும் உஷாராகி விடுகின்றன. பறக்கும் படைகள் போன்ற தனிப்படைகள் தனிக் குழுக்கள் அமைக்கின்றன. காலை, மதியம், உணவு இடைவேளை என ரோந்துப் பணியில் ஈடுபடுகின்றன. இத்தகைய கண்காணிப்பு பணிகளை, உயர் கல்வி நிறுவனங்கள் தன்னிச்சையாக உருவாக்குவதில்லை. பல்கலைக்கழகம் மானியக் குழுவே இதற்கான தீவிரமான வழிகாட்டுதல்களை வழங்குகிறது. கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துகிறது. ஒவ்வொரு கல்வி நிறுவனத்தையும் அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொள்கிறது. இவையெல்லாம் எதற்கு? ‘பகடிவதை’ என்ற பெயரில் முதலாண்டு மாணவர்களுக்கு, மூத்த மாணவர்கள் நடத்தும் வன்கொடுமைகளிலிருந்து தடுத்து நிறுத்துவதற்காகவே.
சமூக ஊடகங்களை பயன்படுத்துவது எவ்வளவு சவாலானதோ, அதே அளவு, பெரும் வாய்ப்புகளையும் அது வழங்குகிறது. உதாரணமாக, மின்னம்பலம் இதழில் வெளியாகும் கட்டுரைகளை, உலகம் முழுவதும் உள்ள நண்பர்களோடு, சிறிது நேரத்தில் பகிர்ந்து கொள்ள முடிகிறது. ஒரு இதழின் வழியாக, ஒருவரின் எழுத்தை தொடர்ந்து அல்லது அவ்வப்போது படிக்கும் வாசகர்களை தாண்டி, பலருடன் பல செய்திகளை பகிர்ந்து கொள்ள முடிகிறது. அவர்களிடமிருந்து பின்னூட்டங்களைப் பெற முடிகிறது.
தன்னாட்சியின் மையப் பொருளே, பாடதிட்டத்தை வடிவமைத்து கொள்ளும் சுதந்திரத்தில் தான் இருக்கிறது. இதனை முதன்மைப் படுத்தி, அவை தன்னாட்சியை பெற்றனவா, என்று வலுவான சந்தேகத்தை உருவாக்கும் வண்ணம் பல கல்லூரிகளின் செயல்பாடுகள் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டின் உயர் கல்வியில், ‘பொதுப் பாடத்திட்டம்’ என்ற நிகழ்வு, பெரும் பேசு பொருளாக மாறி இருக்கிறது. அநேகமாக, அனைத்து ஆசிரியர் சங்கங்கள், கல்வியாளர்கள், கல்வி செயல்பாட்டாளர்கள், தன்னாட்சி கல்வி நிறுவனங்கள், என அனைவரும் இதனை எதிர்ப்பதில் ஒன்றுபட்டு நிற்கின்றனர்.
அடுத்த ஆசிரியர் தினத்திற்கு சற்றேறக்குறைய ஒரே ஒரு மாதமே இருக்கிறது. ஆசிரியர் தினத்தையொட்டி விருதுகள் அறிவிக்கப்பட்டதும், வழக்கமான வாழ்த்துக்களோடு, மத்திய மாநில, அரசுகளின் விருதுகளோடும் நிறைவுற்று விடும்.
டார்வினின் பரிணாம வளர்ச்சி கோட்பாடு தொடங்கி, அதிநவீன டிஎன்ஏ அறிவியல் வரை சாதி இல்லை. இல்லவே இல்லை என்று அடித்து கூறுகிறது. இதனை பாடமாக படிக்கும் குழந்தைகள், சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்கள், பேராசிரியர்கள் விஞ்ஞானிகள் என பலரையும் இந்த சாதி பிடித்து ஆட்டும் மர்மம் இன்னும் பிடிபட வில்லை. இதனையெல்லாம் சரி செய்யும் ஆற்றல் அரசியல் சாசன விழுமியங்களுக்கு உண்டு. இல்லையெனில் உருவாக்கும் ஆற்றலும் உண்டு.
தற்போதைய நிலையில், 700.9 கோடி மக்கள், அழகிய நீல நிற புவி கோளத்தில் வசித்து வருகிறோம். பால்வெளி மண்டலத்தில், நமக்குள்ள சின்னஞ் சிறு மூலையில், உட்கார்ந்து கொண்டு, அமைதியாக சூரியனை சுற்றி வந்து கொண்டு இருக்கிறோம். உலகில் உள்ள மற்ற உயிரினங்களைப் போலவே, நாம் ஒருவரோடு ஒருவர் பிணைக்கப்பட்டவர்கள். நமது தோற்றத்தையும், வாழ்வாதாரங்களையும் தேடிப் பார்த்தால், இயற்கையில் இருந்து எவ்வளவு தூரம் விலகி நின்றாலும், இயற்கையிலிருந்து நம்மை பிரிக்க இயலாது.
சுற்றுச்சூழல் தினத்தின் பொன் விழா ஆண்டு 2023. இதே நாளில், “நமது புவிக் கோளம், அபாய கட்டத்தை அடைந்துள்ளது” என்ற சமீபத்திய ஆய்வறிக்கை முடிவோடும் இணைத்து பார்க்க வேண்டியுள்ளது. இத்தகையதொரு செய்தி நமது காதுகளுக்கு எட்டக் கூடாது என்பதற்காக உருவாக்கப்பட நாள் தான் ஜுன் 5 ஆம் தேதி சுற்றுச்சூழல் தினம்.