சிறப்புப் பத்தி: காலனியத்தின் வித்துக்களும் விளைவுகளும் !

பிரிட்டனில் உள்ள கறுப்பின மக்களில் ஒரு சாரார் ‘மேகன் அமெரிக்க ஆப்பிரிக்கப் பெண்ணியவாதி’, எனவே அரச குடும்பத்தில் பெண்ணியம் பேசும் ஒரு கறுப்பினப் பெண் குடியேறுவதை 21ஆம் நூற்றாண்டின் இன சமத்துவத்தை நிலை நிறுத்தும் ஒரு பெரு நிகழ்வாகப் பார்த்தனர். இப்பத்தியின் நோக்கம் இன சமத்துவமின்மை என்பது வரலாறு அல்ல; அது பல வடிவங்களில் இன்றும் தொடர்ந்துவருகிறது என்பதை அறியும் ஒரு சிறிய முயற்சி.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: காலனியமும் கலைஞரும்!

லண்டனில் இருந்தபடியே கலைஞரின் மரணம் குறித்து வெளியாகும் பல்வேறு அஞ்சலிக் கட்டுரைகளைப் படித்தபடி உள்ளேன். வடநாட்டிலிருந்து வெளியாகும் ஒவ்வொரு அஞ்சலிக் கட்டுரையிலும் உள்ள உண்மைக் குறைவுகளும் திரிபுகளும் அதிர்ச்சியளிக்கின்றன. உதாரணமாக அனைத்து அஞ்சலிக் கட்டுரைகளும் அவரை இந்தி மொழி எதிர்ப்பாளராகச் சித்தரிக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: ஈழ அரசியலும் காலனியத்துவமும்.

நவீன பிரிட்டனில் இன அரசியலுக்கான பங்களிப்பில் சிவா என்றழைக்கப்பட்ட சிவானந்தத்தினுடைய பங்கு அளப்பரியது. இன அரசியல், இன அடிப்படையிலான பாகுபாடு போன்ற கருத்தியல்கள் ஆப்பிரிக்க மற்றும் கருப்பு நிற மக்களைப் பற்றி மட்டுமே இயங்கி வந்த சூழ்நிலையில் – இன அரசியலின் தாக்கமானது தெற்காசிய நாடுகளையும் வெகுவாக பாதித்துள்ளதையும் அங்கு தொடர்ந்து நடைபெறும் (குறிப்பாக இலங்கையில்) பேரினவாத மக்கள்-எதிர் போக்குகளுக்குக் காரணம் காலனியமே என்பது சிவாவின் கருத்தியல்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: நிழல் உலக அறிவுஜீவி சிவானந்தன்

சாம் செல்வன் என்ற ட்ரினிடாட் தமிழர் பிரிட்டனில் உள்ள கரிபீய கறுப்பு இலக்கியத்தை முன்னெடுத்ததில் பெரும்பங்கு வகித்ததை இரண்டு வாரத்திற்கு முன் நாம் பார்த்தோம் (போன வாரம் இத்தொடர் எழுத முடியாது போனதற்கு மன்னிக்க). பிரிட்டனின் சமகாலக் கறுப்பு அறிவுஜீவிகளின் செயல்பாடுகளில் சிவானந்தன் என்ற கொழும்பில் பிறந்த தமிழர் பற்றியவரின் பங்களிப்பை இந்த வாரம் பார்க்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: ட்ரினிடாடின் இலக்கியக் குரல்

ட்ரினிடாட், டொபெகோ போன்ற தீவுகளிலிருந்து வந்த வின்ட்ரஷின் குழந்தைகளின் வாழ்க்கை எவ்வாறாக இருந்தது என்பதைத் தெரிந்துகொள்ள பிபிசி, பிரிட்டிஷ் பதி அல்லது அப்போது வந்த செய்தித்தாள்களில் வந்த விவரணைகள் காலனியத்தை ஏதோ ஒருவகையில் ‘அங்கீகரிப்பதாகவே’ இருக்கின்றன. ஆனால், 1950களில் ட்ரினிடாடிலிருந்து வந்த குடியேறிகளே தங்களது வாழ்வனுபவத்தை எழுத ஆரம்பிக்கின்றனர். இவர்களின் பதிவு முற்றிலும் வேறுபட்டதாக உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: காலனியத்துக்கு ஆதரவான சமகாலக் குரல்கள்

முற்போக்குவாதிகளும் இடதுசாரி ஊடகங்கள் அறிவுஜீவிகள் இந்தக் கட்சிகளினால் ஏற்படக்கூடிய, ஏற்பட்டுக் கொண்டிருக்கிற நச்சு விளைவுகளை தொடர்ந்து ஊடகங்களின் மூலம் முன் வைக்கின்றனர். இருந்தாலும் பிரிட்டனில் உள்ள ஒரு பகுதியினர் இக்கட்சிகளுக்கு தொடர்ந்து ஆதரித்த வண்ணம் உள்ளனர். இக்கட்சிகள் பிரிட்டனின் பாரம்பரியப் பெருமைகளில் ஒன்றாகக் காலனியத்தை முன் வகிக்கிறது. இப்படிப்பட்ட கட்சிகள் காலனியத்தை ஆதரிப்பது பன்மைத்தன்மை வாய்ந்த பிரிட்டனின் ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிக்கும் தன்மை படைத்தது என இடதுசாரி அறிவுஜீவிகள் வாய்ப்புக் கிடைக்கும் இடங்களில் எல்லாம் எடுத்துக் கூறியவண்ணம் உள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: காலனியமும் சேவை நிறுவனங்களும்!

தன்னார்வ நிறுவனங்களும் ஹைதிக்கு உதவி செய்யப் பெருமளவில் முன்வந்தன. பிரிட்டனில் மட்டும் 107 மில்லியன் பவுண்டுகள் பொதுமக்களிடமிருந்து நன்கொடையாகப் பெறப்பட்டது. அமெரிக்காவில் தனவந்தர்களுடைய நிறுவனங்கள், உதாரணமாக ராக்கெஃபெல்லர், பில் கேட்ஸ், ஃபோர்டு, பின்னர் கூகுள் போன்றவை, சமூகச் சேவைகளுக்குப் பணம் கொடுப்பது சாதாரணமானதாகும். ஆனால், பிரிட்டனில் பேரிழப்பு, மருத்துவ இடர் போன்ற துயரங்களுக்கு மக்களிடமிருந்து பணம் திரட்டப்படுவது முக்கியச் சமூக நிகழ்வாகும். பிரிட்டனில் உள்ள பிபிசியில் இரண்டு வருடத்துக்கு ஒருமுறை காமிக் ரிலீஃப் (comic relief) என்ற சேவை நிறுவனம் ஆப்பிரிக்க நாடுகளுக்குப் பணம் திரட்டிவருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: விண்ட்ரஷின் குழந்தைகள் சொல்லும் பாடம் என்ன?

(மெய்யறு அரசியல் (Post-Truth politics) குறித்தும் இங்கிலாந்து நாட்டு அரசியல் குறித்தும் மின்னம்பலத்தில் தொடர்கள் எழுதிவந்த முரளி சண்முகவேலனின் புதிய பத்தி இது. புதன்கிழமைதோறும் வரும் இந்தத் தொடரில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அடித்தட்டு மக்களை, ஆளும் வர்க்கத்தினர் எவ்வாறு தங்கள் நலனுக்காக நசுக்கி ஒடுக்குகிறார்கள் என்பதைப் பற்றி அலசுகிறார். இந்த அலசல் லண்டனில் தொடங்கி, பல இடங்களில் பயணப்பட்டு, தூத்துக்குடியில் முடிவுறும். “விவாதிக்கப்படும் பொருளின் அனைத்துத் தரப்புக்களையும் குறிப்பாக பொதுப் புத்தியைத் தாண்டி சாமானியர்களின் நலன் குறித்த பார்வைகளை கவனப்படுத்துவதாக இத்தொடர் இருக்கும்” என்கிறார் முரளி. – ஆசிரியர்)

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: பிரிட்டனின் இளவரசர் திருமணம் சொல்லும் செய்தி என்ன?

(மெய்யறு அரசியல் (Post-Truth politics) குறித்தும் இங்கிலாந்து நாட்டு அரசியல் குறித்தும் மின்னம்பலத்தில் தொடர்கள் எழுதிவந்த முரளி சண்முகவேலன், மீண்டும் தன் பத்தியைத் தொடங்குகிறார். புதன்கிழமைதோறும் வரவிருக்கும் இந்தத் தொடரில் உலகின் பல்வேறு பகுதிகளிலும் அடித்தட்டு மக்களை, ஆளும் வர்க்கத்தினர் எவ்வாறு தங்கள் நலனுக்காக நசுக்கி ஒடுக்குகிறார்கள் என்பதைப் பற்றி அலசப்படும். இந்த அலசல் லண்டனில் தொடங்கி, பல இடங்களில் பயணப்பட்டு, தூத்துக்குடியில் முடிவுறும். “விவாதிக்கப்படும் பொருளின் அனைத்துத் தரப்புக்களையும் குறிப்பாக பொதுப் புத்தியைத் தாண்டி சாமானியர்களின் நலன் குறித்த பார்வைகளைக் கவனப்படுத்துவதாக இத்தொடர் இருக்கும்” என்கிறார் முரளி. – ஆசிரியர்)

தொடர்ந்து படியுங்கள்

என் பார்வையில் மின்னம்பலம்: முரளி சண்முகவேலன்

மின்னம்பலம்.காம் என்னும் ஒரு மொபைல் பத்திரிகை ஆரம்பிப்பதற்கான விவாதங்களில் ஒரு சில முறை பங்கெடுத்துக் கொண்டதால் எனக்கும் மின்னம்பலத்துக்கும் உள்ள உறவானது அதன் கருவிலிருந்தே தொடங்கிவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்