சிறப்புப் பத்தி: காபிக் கொட்டையும் சுரங்க அரசியலும்!

இந்தியாவில் நிலவும் ஊழல் சுற்றுப்புறச் சூழல் கேடு, மக்களின் வாழ்வாதாரங்கள் பறிக்கப்படுவது ஆகியவை பிரிட்டனின் பிரச்சினையாகாது. அதே சமயத்தில் இந்தியா போன்ற நாடுகளில் உள்ள அமைப்புரீதியான, அரசியல் ரீதியான போதாமைகளினால் கிடைக்கும் பயன்களை பிரிட்டன் அனுபவிக்கக்கூடும்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: தூத்துக்குடியில் காலனிய அரசியல் எதிரொலி!

உதாரணமாக தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதற்குப் பின் அந்த ஆலையைச் சுற்றி உள்ள காற்றின் மாசு குறைந்துள்ளதாகத் தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்திற்கு ஒரு ஆய்வறிக்கை அளிக்கப்பட்டதாக ஃபாய்ல் வேதாந்தாவின் சமரேந்திர தாஸ் தெரிவித்தார் . குறிப்பாக ஸ்டெரிலைட்டின் சுற்றுப்பகுதியில் உள்ள காற்றில் சல்ஃபர் ஆக்ஸைட் மிகவும் குறைந்துள்ளதாக இந்த ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: இயற்கைவளங்களின் உண்மையான விலை!

பிரிட்டனின் வடமேற்குப் பகுதியில் கம்ப்ரியா (cumbria) என்ற ஒரு மாகாணம் உள்ளது. இயற்கை அழகு ததும்பும் இப்பகுதியில், மலைகளுக்கு நடுவே, 2362 சதுர கிலோமீட்டர் அளவுள்ள அடர்ந்த தேசியப் வனப் பூங்கா இயற்கையாகவே அமைந்துள்ளது. லேக் டிஸ்ட்ரிக்ட் (ஏரி மாவட்டம்) என்றழைக்கப்படும் இப்பகுதி யுனெஸ்கோவின் உலக பாரம்பரியத்துக்கான களங்களில் ஒன்றாக 2017இல் அறிவிக்கப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: சுரங்கக் குத்தகை!

தாதுக்களைப் பிரித்தெடுப்பது, அரிய உலோகங்களைத் தோண்டி எடுப்பது ஆகியன இயந்திரம் மற்றும் தொழிற் புரட்சியின் விளைவுகள். இது காலனியத்தோடு பின்னிப் பிணைந்திருப்பது பற்றி இத்தொடரின் முன் அத்தியாயங்களில் பார்த்தோம். எனவே, காலனியத்தின் கீழ் அடிமைப்பட்ட நாடுகளில் உள்ள சுரங்கங்களைத் தோண்டி வளம் சுரண்டப்பட்டபோது பிரிட்டன் போன்ற அரசுகள் அடிமை நாடுகளுக்கு எந்த விதமான ராயல்டி கட்டணமும் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கவில்லை.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: செம்புச் சுரண்டல்!

ஜாம்பியா போன்ற ஆப்பிரிக்க நாடுகள் பெயரளவில் சுதந்திரம் அடைந்திருந்தாலும், இம்மாதிரியான இயற்கைவளச் சுரண்டலின் மூலம் தொடர்ந்து காலனிய ஆதிக்கத்தின் கீழ் இருந்து வருகிறது என்பதே நிதர்சனமாகும். இந்த மாதிரியான காலனிய மீளுருவாக்கத்திற்குப் பன்னாட்டு நிதி நிறுவனங்களின் விதிகளும் துணைபோகின்றன.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: இன்றைய உலகில் செம்பு!

மனித சமுதாயம் தனது நாகரிகத்தில் முதன் முதலாகக் கண்டுபிடித்து தினசரி உபயோகத்திற்கு கொண்டு வந்த முதல் உலோகம் செம்பு என நம்பப்படுகிறது. மிகப் பண்டைய காலத்தில் செப்பு நாணயங்கள் இதற்கு ஒரு சாட்சி. ஆக செம்பு ஆரம்ப காலத்தில் இன்றைய தங்கம் போல மதிப்பு மிக்க ஒரு உலோகமாக இருந்திருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: காப்பர் காலனியம்

ஐரோப்பாவில் 1500ஆம் ஆண்டுகளின் வாக்கில் ஆரம்பித்த இயந்திரப் புரட்சியானது உலோக மற்றும் தாதுக்களின் வேட்டைகளை ஆரம்பித்து வைத்தது. இந்த இயந்திரப் புரட்சியின் பசிக்குத் தீனி போட வேண்டுமெனில், முதலில் இயந்திரங்கள் தேவை. அதற்கு உலோகங்கள் தேவை. இந்த உலோகங்கள் ஐரோப்பாவை விட ஆப்பிரிக்க, தென்னமெரிக்க, ஆசியக் கண்டங்களில் ஏராளமாக இருந்தன; இருக்கின்றன. இவ்வுலோகங்களை பிரிட்டனின் கிழக்கிந்திய கம்பெனி மற்றும் ஆங்கிலேயப் பெரும் முதலாளிகள் ஐரோப்பிய இயந்திரப் பேட்டைக்குள் கொண்டுவருவதின் மூலமாக லாபம் ஈட்ட முடியும் எனக் கண்டுகொண்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: உலோகமும் காலனியமும்!

சமூகத்தில் உள்ள பெரியவர்கள், அரசியல் கட்சிப் பிரபலங்கள், நிறுவனங்கள், அரசுகள் என பிறந்த நாள் ஆண்டு விழாக் கொண்டாட்டங்களுக்கு உலோகங்களின் பெயர் சொல்லி அழைப்பதும் ஒரு வகையான உயர் நாகரீகமாகப் பார்க்கப்படுகிறது. உலோகங்களின் மதிப்புகள் (“இவரு தங்கமானவரு”) நமது கலாச்சாரத்தோடு இணைந்துள்ளன. இம்மாதிரியான சொல்லாடலில் உள்ள உலோகங்களின் பெருமை போற்றுவதில் காலனியத்தின் வரலாறு’ம்’ உள்ளது. அது குறித்த அலசலே இந்த வாரமும் மற்றும் வரும் ஒரு சில வாரங்களிலும் தொடர்ந்து எழுதப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: சுவர் சொல்லும் பாடம்

மெக்ஸிகோ மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இருந்து ‘கள்ளத்தனமாக’ வருபவர்களைத் தடுக்கும் வகையில் அமெரிக்காவின் தென் எல்லையில் நீண்ட எல்லைச் சுவர் ஒன்றை எழுப்புவேன் என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் சொன்னது நினைவிருக்கலாம். அந்தச் சுவர் அரசியலை எதிர்த்து சுதந்திரவாதிகளும் குரலெழுப்பினர்.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: எல்லைப் பாதுகாப்பும் காலனியமும்

உள்ளபடியே, மேற்குலகிற்கு வரும் சிலர் தங்களது வருகைகளுக்குப் பொய்க் காரணங்கள் சொன்னாலும், அவர்களை நடத்தும் விதம் மிகவும் கேள்விக்குரியது. இந்நிகழ்ச்சிகளின் பிரபலமே வெள்ளை உலகம் மற்றவர்களை நடத்தும் விதத்திலும், பொய்ப் பிரயாணிகளைக் கண்டறியும் முறையிலும், வெள்ளை அதிகாரத்தை உயர்த்திப் பிடிப்பதிலும் உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்