சிறப்புக் கட்டுரை: ஜனநாயக அரசுகளைத் தாக்கிய கொரோனா

விலகியிருந்தால்தான் தொற்றை அழிக்க முடியும் என்ற ஐரோப்பியப் புரிதலை அவர்களின் மொழிகளிலேயே பார்க்கலாம். சமூக இடைவெளி (Social Distancing) என்பது இன்றைய காலத்துக்கேற்ற அரசியல் சரித்தன்மை கொண்ட பதம். வரலாற்றின்படி சமூக ‘விலக்கமே’ – இடைவெளி அல்ல – தொற்று அழிப்புக்கான வழி என்பது ஐரோப்பிய வரலாற்று அறிவு.

தொடர்ந்து படியுங்கள்

5ஜி யால் பரவுகிறதா கொரோனா? மேற்குலகில் பரவும் பீதி!

5-ஜி வதந்தி போல பலவிதமான வதந்திகள் மேற்குலகில் பரப்பப்பட்டு வருகிறது. ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டதே கொரோனா, பில் கேட்ஸ் இந்த வைரஸை வைத்து பணம் பண்ணுகிறார், பூண்டு உட்கொண்டால் சரியாகி விடும், கொரோனா வேற்றுலகில் இருந்து வந்துள்ளது என ஒவ்வொரு வதந்திகளுக்குப் பின்னரும் அரசியல், மத, இன ரீதியான காரணங்கள் ஒளிந்திருக்கிறது. (மாட்டு மூத்திரம் குடித்தால் கொரோனா வைரஸ் தொற்றாது என்ற கண்டுபிடிப்பு என்பது மின்னம்பலம் வாசகர்களுக்குத் தெரிந்ததே.)

தொடர்ந்து படியுங்கள்

கொரோனா வைரஸ் லண்டனிலிருந்து ஒரு கடிதம்!

லண்டன் போன்ற பெருநகரங்களில் கொரோனா வைரஸ் செல்வந்தர்களையும் நடுத்தட்டு மக்களையும் அதிக அளவு பாதிக்கவில்லை. அரசு மற்றும் நிரந்தரப் பணியாளர்களின் வாழ்க்கைகளிலும் அதிக பாதிப்பு கிடையாது. ஆனாலும் கொரோனா தொற்றுக்குப் பின் பல துறைகள் பணியாளர்களை வீட்டுக்கு அனுப்பிய வண்ணம் உள்ளது. அதன் ஒரு பகுதியாகவே பிரிட்டனில் உள்ள பல பல்கலைக்கழகங்கள் ஒப்பந்த அடிப்படையில் வேலை பார்த்து வரும் ஆசிரியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

பிரிட்டன் தேர்தல்: இந்துக்கள் மற்றும் தமிழர்கள் என்ன செய்ய வேண்டும்?

மின்னம்பலத்தில் இந்தக் கட்டுரை பதிக்கப்படும்போது பிரிட்டன் தனது நாடாளுமன்றத் தேர்தலுக்கான விடியலை நோக்கி இருக்கும். டிசம்பர் 12ஆம் தேதி பிரிட்டனில் நடைபெறவுள்ள இந்தத் தேர்தல், நான் குடியேறிய பின் நடைபெறும் ஐந்தாவது நாடாளுமன்றத் தேர்தலாகும். பிரிட்டனில் வாக்குரிமை கொண்ட தமிழன் என்ற வகையிலும், மோடியின் இந்துத்துவக் கொள்கைகள் பிரிட்டனில் வேரூன்றி வரும் நிலையிலும் இந்தத் தேர்தல் ஒரு மிக முக்கியமான நிகழ்வாகும்.

தொடர்ந்து படியுங்கள்

வளங்குன்றா வளர்ச்சியைத் தடுக்கும் சாதிப் பாகுபாடுகள்!

பிறப்பின் அடிப்படையில் சமூகத்தால் ஒருவர்மீது திணிக்கப்படும் சாதி சார்ந்த அடையாளம், கிழக்காசிய மற்றும் வெளிநாடுகளில் வாழும் கிழக்காசிய மக்களில் ஐந்தில் ஒரு பகுதியினர் தங்களுடைய வாழ்க்கையில் பெறும் வாய்ப்புகளின் அளவையும் தன்மையையும் தீர்மானிக்கிறது. இதனால் அதிக அளவில் பாதிக்கப்படுவது தலித்து சமூகத்தைச் சேர்ந்த மக்கள். இருப்பினும், ஐக்கிய நாடுகள் சபையின் “வளங்குன்றா வளர்ச்சி இலக்கு”களை அடைவதில் இருக்கும் முக்கியச் சவால்களுள் ஒன்றாக இந்த வகையான பாகுபாடு பார்க்கப்படுவதில்லை.

தொடர்ந்து படியுங்கள்

உலகமயமாக்கலின் முரண்களும், அவற்றின் தாக்கங்களும்! – ஜெ.ஜெயரஞ்சன்

இந்தப் புத்தகம் மின்னம்பலம் இதழுக்காக முரளி சண்முகவேலன் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும். இக்கட்டுரைகளின் பேசுபொருள் காலனியம் மற்றும் நவகாலனியம். இப்பேசுபொருள்கள் பொருளாதாரமாக, வரலாறாக, கலையாக, இலக்கியமாக எனப் பல வடிவங்களை எடுக்கின்றன.

தொடர்ந்து படியுங்கள்

ஓலா, ஊபர் வெறும் சேவைகள் அல்ல! – முரளி சண்முகவேலன்

இணையம் என்பது விடுதலைக் கருவியாகவும், ஜனநாயகத்தைத் தக்கவைக்கக் கூடிய தொழில்நுட்பமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இதில் ஓரளவு உண்மை உள்ளது. தகவல்களை எங்கும் உடனடியாகக் கொண்டு சேர்ப்பதிலும் அது குறித்த அரசியல் பொருளாதாரப் பயன்களும் சொல்லி மாளாது. உதாரணமாக இணையம் இல்லையெனில் இந்தக் கட்டுரைகூட சாத்தியமில்லை.

தொடர்ந்து படியுங்கள்

நுகர்வோர் நலன் என்னும் பெயரால்… – முரளி சண்முகவேலன்

கிக் நிறுவனங்கள் தங்கள் வியாபார விதிகளுக்கு ஆதரவாக வைக்கின்ற முக்கிய வாதம் நுகர்வோர் நலன் பற்றியதாகும்.

தொடர்ந்து படியுங்கள்

எதிர்த்து நிற்கும் தொழிலாளர்கள்! – முரளி சண்முகவேலன்

அது மட்டுமல்ல: கிக் இணையத்தின் வியாபார வடிவம் அத்தொழில்நுட்பத்தின் கண்காணிப்புத் தன்மையில் அடங்கியுள்ளது. கண்காணிப்பு என்பது ஒரு எதேச்சதிகாரத் தன்மை. கண்காணிப்புத் தன்மையின் சிவில் வடிவம், தரவுகளை உபயோகிக்கும் பயனர்களின் முகங்களைத் தெரிந்துகொண்டு பின்னர் அவர்களிடம் பண்டம் விற்பது.

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புப் பத்தி: ஒராங்குட்டான் + நவகாலனியம் = பண்டிகைக் கால விளம்பரம்

கடந்த சில வருடங்களாக பிரிட்டனில் உள்ள கிறிஸ்துமஸ் விளம்பரங்களில் வெள்ளையரல்லாதோரின் முகங்கள் பிரதானமாக்கப்படுகின்றன. குறிப்பாகக் கறுப்பினத்தைச் சேர்ந்தவர்களும் பிரிட்டனின் கிறிஸ்துமஸ் பண்டிகைகளின் முகங்களாகச் சில வருடங்களாக முன்னிலைப்படுத்தப்படுகின்றனர். இம்மாதிரியான விளம்பரங்கள் பிரிட்டன், தனது காலனிய வரலாறு மற்றும் வெள்ளையினப் பெருமை பேசுவதை விட்டு தாராளவாதத்தை நோக்கிச் செல்வதின் அடையாளமே என உள்ளூர் தாராளவாதிகள் பேசிவருகின்றனர் (மேகன் மார்க்கிளின் திருமணத்தைப் புகழ்ந்தது போல). இக்கூற்றில் ஒரு வகையான உண்மை உள்ளதையும் மறுப்பதற்கில்லை. கறுப்பினத்தோர் ஊடகங்களில் சாதாரணக் குடியாகப் பிரதிநிதித்துவப்படுவது வரவேற்கத்தக்கதே.

தொடர்ந்து படியுங்கள்