சந்திரயான்-3: இஸ்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

சந்திரயான்-3 விண்கலத்தின் விக்ரம் லேண்டரை தரையிறக்கும் பணி, இன்று (ஆகஸ்ட் 23) மாலை 5.44 மணிக்கு தொடங்கும் என இஸ்ரோ அறிவித்துள்ளது. மேலும், விக்ரம் லேண்டரை தானியங்கி தரையிறக்கும் முறையில் தரையிறக்க அனைத்தும் தயார் நிலையில் உள்ளது  எனவும் இஸ்ரோ கூறியுள்ளது. இது தொடர்பாக இஸ்ரோ இன்று வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “தரையிறக்கம் செய்ய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இடத்திற்கு லேண்டர் அமைப்பின் வருகைக்காக காத்திருக்கிறோம், வந்ததும் இந்திய நேரப்படி மாலை 5.44 மணிக்கு லேண்டரை தரையிறக்கும் பணிகள் தொடங்கிவிடும். […]

தொடர்ந்து படியுங்கள்

சந்திரயான் – 3: விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவது எப்படி?

நிலவுக்கு செல்லும் ‘சந்திரயான் – 3 விண்கலத்தை சுமந்தபடி, எல்.வி.எம்., 3 – எம்4 ராக்கெட் ஜூலை 14 ஆம் தேதி பிற்பகல் 2.35 மணிக்கு விண்ணில் பாய்ந்தது. சில நிமிடங்களில் ராக்கெட்டில் இருந்து சந்திரயான்-3 விண்கலம் வெற்றிகரமாக பிரிந்து, புவி சுற்றுவட்டப்பாதையில் நிலை நிறுத்தப்பட்டது. பூமியைச் சுற்றிவந்த விண்கலத்தின் சுற்றுப்பாதை தொலைவு படிப்படியாக அதிகரிக்கப்பட்டது. தொடர்ந்து ஆகஸ்ட் 1 ஆம் தேதி புவியீர்ப்பு விசையிலிருந்து சந்திரயான்-3 விலக்கப்பட்டு நிலவை நோக்கிச் செல்லும்படி அதன் பயணப்பாதை மாற்றப்பட்டது. […]

தொடர்ந்து படியுங்கள்